election2021

img

இந்தியாவின் தேசிய உணவே மாட்டு இறைச்சிதான்.... அசாம் பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் அதிரடி...

கவுகாத்தி:
“இந்தியாவின் தேசிய உணவே மாட்டுக்கறி-தான்”என்று அசாம் மாநில பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் பேசியுள்ளார்.அசாமின் கவுரிபூர் தொகுதியில் பாஜக சார்பில்போட்டியிடுபவர் பனேந்திர குமார். போடோ இனத் தலைவரான இவர், கடந்த1996-ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அசாம் கண பரிஷத்சார்பில் 2001ஆம் ஆண்டிலும், போடோலாந்து மக்கள்முன்னணியில் இணைந்து மூன்றாம் முறையாக 2011-ஆம் ஆண்டிலும் வெற்றிபெற்ற இவர், கடந்த 2020டிசம்பரில் பாஜகவில் இணைந்து, தற்போது பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.இதனிடையே, தனதுதொகுதியில் இஸ்லாமியர் கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபனேந்திர குமார், “மாட்டிறைச்சியை யார் தடை செய்ய முடியும்? அது இந்தியாவின் தேசிய உணவாகும்.எனவே, அசாமில் மட்டுமல்ல இந்தியாவில் எங் குமே மாட்டிறைச்சியை தடை செய்ய முடியாது” என்றுபேசியுள்ளார்.பனேந்திர குமாரின் இந்தப் பேச்சு பாஜகவினரை கொதிப்படைய வைத்துள் ளது. மாட்டிறைச்சி தொடர்பான பேச்சுக்காக பனேந்திரகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் பலர் கூறியுள்ளனர்.

;