election2021

img

அசாமில் 2 ஆவது முறையாக ஆட்சியை பிடித்தது பாஜக....

கவுகாத்தி:
சட்டசபைத் தேர்தலில் 78 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் அசாமில் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அசாமில் 126 தொதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. 

பாஜக தலைமையிலான கூட்டணியில் அசோம் கன பரிஷத், யுபிபிஎல் மற்றும் ஞான சுரக்‌ஷா கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் கன மோர்ச்சா, சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் களம் கண்டது. இந்த இரு பிரம்மாண்டஅணிகளுக்கிடையே ஏஜேபி, ரஜோர்தால் போன்ற கட்சிகளும் களம் கண்டன.இதில் பாஜக கூட்டணி 78 இடங்களில் வென்றது. இதனால் அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது. 

காங்கிரசுக்கு 46 இடம்
மெகா கூட்டணி அமைத்திருந்தும் காங்கிரஸ் 46 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. இதில் குடியுரிமை சட்டத்துக்கான போராட்டங்களால் உருவான ஏஜேபி கட்சி ஒரு இடத்தை வென்றுள்ளது. இதேபோல், சிறையில் இருக்கும் போராட்டக்காரரான அகில் கோகாய் சிப்சகர் தனது தொகுதியில் வென்றுள்ளார்.

அடுத்த முதல்வர் யார்?
அசாமில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த முதல்வராகபதவியேற்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கும், அமைச்சர் ஹிமந்த் விஸ்வ சர்மாவுக்கும் இடையே முதல்வர் நாற்காலியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.அசாமில் பெரும் செல்வாக்கு பெற்றவரான ஹிமந்த் விஸ்வ சர்மா, காங்கிரஸில் இருந்து விலகி 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். ஹிமந்த் விஸ்வ சர்மாவைதொடர்ந்து காங்கிரஸில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பலரும் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், தற்போதைய பேரவைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பதால், ஹிமந்த் சர்மாவுக்கே முதல்வர் பதவி கிடைக் கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்த்துள்ளனர்.

;