election-2019

img

முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தருமபுரி, ஏப்.2-60 வயதான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்துள்ளர்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் செவ்வாயன்று பென்னாகரம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டர். அப்போது, அவர்பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் உங்களின் வீடுதேடி குறைகேட்டு நிவர்த்தி செய்வேன். திமுக ஆட்சிகலத்தில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 60 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். 2 லட்சம் பேருக்குவேலைவழங்குவதாக சொன்ன அன்புமணி வேலைவாய்ப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூறுநாள் வேலைத்திட்டத்தில் பல கிராமங்களுக்கு வேலைதரவில்லை. காங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வந்த உடன் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 150 நாட்களாக வேலை வழங்கப்படும். சட்டப்படியான கூலிவழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கிராமமக்களை கேட்டுக்கொண்டார்.


இந்த பிரச்சாரத்தின் போது,திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ, பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ, பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் சண்முகம், இளைஞரணி பிரகாசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், வே.விஸ்வநாதன், பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் ஆர்.சின்னசாமி, காங்கிரஸ் வட்டார செயலாளர் சண்முகம், நகர செயலாளர் சமதர்மம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன், பாப்பாரப்பட்டி வட்டார செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் ராஜா, கோவிந்தசாமி மற்றும் விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.இப்பிரச்சாரம் பாப்பாரப்பட்டியில் துவங்கிய பிக்கிலி, பெரியூர், திருமள்வாடி, பனைக்குளம் கிட்டம்பட்டி, பிளப்பநாயக்கன அள்ளி, சிட்லகாரம்பட்டி, ஓஜி அள்ளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போதுவேட்பாளர் மருத்துவர்எஸ்.செந்தில்குமாருக்கு மேளதாளத்துடன் கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

;