election-2019

img

முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் வேலை கிடையாது - பாஜக எம்பி மிரட்டல்


முஸ்லீம் வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்கா விட்டார் வேலை கிடையாது என்று மத வெறியை தூண்டும் வகையில் மேனகா காந்தி பேசி உள்ளார். எதிர்க்கட்சிகள் மேனகா காந்தியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. நேற்று, ஆந்திரா, தெலங்கானா உத்திரபிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்க முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் பா.ஜ.க மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த முறை, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், தற்போது பிலிபிட் தொகுதி எம்.பியாக இருந்துவருகிறார். அந்த தொகுதியில் தற்போது, அவரது மகன் வருண் காந்தி போட்டியிடுகிறார். சுல்தான்பூர் தொகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் டூரப் காணி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மேனகா காந்தி, ’முஸ்லீம்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெறுவதை நான் விரும்பவில்லை. நான் மிகவும் காயப்படுவேன்.


முஸ்லீம்கள் வந்து என்னிடம் வேலை கேட்டால், இதுகுறித்து நான் யோசிப்பேன். முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், அவர்கள் என்னிடம் வேலை எதிர்பார்க்கக் கூடாது. முஸ்லீம் வாக்காளர்கள், இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு கொடுத்து வாங்கும் வகையிலான உறவு. பிலிபிட் தொகுதியில், நான் செய்திருக்கும் வேலை குறித்து நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம். நான் செய்தது போதுமானது இல்லை என்று நீங்கள் கருதினால், நீங்கள் எனக்கு வாக்களிக்கவேண்டாம் என்று முடிவு எடுக்கலாம்’ என்று தெரிவித்தார். மத விரோதத்தை தூண்டும் விதமாக மத்திய அமைச்சர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேனாகா காந்தியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



;