education

img

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு....

புதுதில்லி:
2021 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தி வருகிறது. 2021-ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 27 அன்று நடக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. போட்டித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு, அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

;