தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள 1060 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Lecturers
காலியிடங்கள்: 1060
சம்பள விகிதம்: ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் முதல் BE./ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். BE./ B.Techபடிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற தவறியவர்கள் அதேபாடப்பிரிவில் ME./ M.Tech பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். English/ Maths/ Chemistry போன்ற Non-Engineering பாடப்பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட பாடத்தில் முதல் வகுப்பு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: TRB-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. (SC/ ST/ SCA/ PWD பிரிவினர்களுக்கு ரூ.300). இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.