education

img

பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் பணி வாய்ப்பு

பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் வங்கியில் பணி வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 150 அதிகாரி பணியிடங்களுக்கான பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 150
நிர்வாகம்: பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி
பணி: Generlist Officers
ஊதியம்: மாதம் ரூ.48,170 - ரூ.69,810
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA, ICWA, CFA, FRM இவற்றில் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவதொரு வங்கியில் 3 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.118ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bankofmaharashtra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/a0ab94ef-0ae6-4e05-8f2b-2b5d0a06c807.pdf">https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/a0ab94ef-0ae6-4e05-8f2b-2b5d0a06c807.pdf என்ற லிங்கை கிளிக் சென்று தெரிந்து கொள்ளலாம்

;