education

img

ஐஏஎஸ், ஐபிஎஸ்- முதல் நிலைத் தேர்வு ஒத்திவைப்பு....  

புதுதில்லி:
மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிக மானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் பின்னர் முதன்மைத் தேர்வு  எழுதஅனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படு வார்கள். கொரோனா பரவலால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த  முதல் நிலைத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கொரோனோ தொற்று பரவலால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்த மத்திய பணியாளர் தேர்வாணையம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

“நாடெங்கும் கோவிட்-19 இரண்டாம் அலை பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை நடத்துவது சாத்தியமில்லை.சிவில் தேர்வின் முதல்நிலைத் தேர்வு   ஜூன் 27ஆம் தேதி அன்று நடப்பதாக இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத்தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தேர்வானவர்களுக்கான நேர்முகத்தேர்வும் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் முதல் நிலைத்தேர்வும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வர்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;