economics

img

பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே வழி.... மக்கள் கையில் நேரடியாக பணத்தை தர வேண்டும்.... கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் வலியுறுத்தல்...

திருவனந்தபுரம்:
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு மத்திய அரசு ஒருசிறப்பு தொகுப்பை செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.எம். தாமஸ் ஐசக் வலியுறுத்தியுள்ளார். சாதாரண மக்களை கைபிடித்து தூக்கிவிட வேண்டிய நேரம் இது! என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கிய ஊதியத்தில் பாதியை முன்கூட்டியே செலுத்த அனுமதிக்கப்பட்டால், குறைந்தது, ரூ. 50 ஆயிரம் கோடிமக்களிடம் சென்றடையும். இதில்,மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படாமல் வரவிருக்கும் ஆண்டுகளில் அதைப் பிடித்தம் செய்து கொள்ளலாம். குறு, நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் வட்டி தவிர்க்கப்பட வேண்டும். பண மதிப்பு நீக்கத்தால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள சிறு தொழில்முனைவோர் துறை, கொரோனா இரண்டாவது அலையால் முற்றிலும் சீர்குலைந் துள்ளது.வேளாண் துறைக்கு அடுத்தபடியாக பெரும்பகுதியினரின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சிறுதொழில் துறையைப் பாதுகாக்க அவசர உதவி தேவை. இவை மூடப்பட்டால், மீண்டும் திறக்க முடியாமல் போய்விடும். கோவிட் நெருக்கடியிலிருந்து மீள நீண்ட காலமாகும் என்பதற் கான அறிகுறிகள் உள்ளன. பொருளாதாரம் உயர கால அவகாசம் தேவைப்படும். அவ்வாறான நிலையில், மக்களிடம் பணத்தை ஒப்படைக்கத்தக்க நடவடிக்கையே தொகுப்பில் தேவை.இவ்வாறு தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

;