economics

img

நடப்பாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.3 சதவிகிதம்தான்.... வளர்ச்சிக் கணிப்பை 1.8 சதவிகிதம் குறைத்தது உலக வங்கி....

புதுதில்லி:
2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவிகிதமாகவே இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. 

முன்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதிலிருந்து 1.8 புள்ளிகளை உலக வங்கி தற்போது குறைத்துள்ளது.இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது (ஜிடிபி), கடந்த 2020-2021 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகள் மோசமான சரிவை சந்தித்தது. இதனால், முழு நிதியாண்டிலும் இந்திய பொருளாதாரம் -7.3 சதவிகிதம் என்ற வீழ்ச்சியில் உள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். இந்நிலையில்தான், 2021-22 நிதியாண்டிலும் இந்தியப் பொருளாதாரம் 8.3 சதவிகிதம் என்ற அளவிற்கே வளர்ச்சிபெறும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இந்தியா பொருளாதார ரீதியாக மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் இது மீண்டும் சரிவை சந்தித்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. 
இந்தியா பொருளாதார கொள்கைகளை துரிதப்படுவதன் மூலமும், திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதன் மூலமும் இதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கார்ப்பரேட், உற்பத்தி துறையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாங்கும் திறன் குறைவாக இருக்கும் நிலையில், வளர்ச்சி உள்கட்டமைப்பு, கிராம அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகியவை மீது கவனம் செலுத்துவதன் மூலமும், அதிக தொகையை இதில் செலவு செய்வதன் மூலமும் சரிவில் இருந்து மீள முடியும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

;