economics

img

11 மாதங்களில் இல்லாத சரிவில் தொழிற்துறை... 48.1 சதவிகிதமாக குறைந்த உற்பத்திக் குறியீடு....

புதுதில்லி:
இந்தியாவில் உற்பத்தித் துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு (PurchasingManagers Index- PMI) கடந்த ஜூன்மாதத்தில், 11 மாதங்களில் இல்லாதஅளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலின் 2-ஆவது அலையால், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நாடு முழுவதும் பரவலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. உற்பத்தி, தொழில், வர்த்தகம் பெருமளவில் முடங்கியது. கோடிக்கணக்கானோர் வேலையிழப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில்தான், ஜூன் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து இருப்பதாகவும், தொழிற்துறை உற்பத்தி தொடர்பான பிஎம்ஐ (PMI) குறியீடும் 11 மாதத்தில் இல்லாத அளவுக்கு 48.1 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், ‘ஐஎச்எஸ் மார்கிட் இந்தியா’ (IHS Markit India) தெரிவித்துள்ளது. ஜூலை 2020 க்குப் பிறகு முதல் முறை யாக குறியீட்டு எண் 50.0 ஐ விடக் குறைந்திருப்ப தாகவும் அது கூறியுள்ளது. கடந்த 2021 மே மாதத்தில் கூட பிம்ஐ குறியீடு50.8 சதவிகிதமாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது.“ஜூன் மாதத்தில் மூலதன பொருட்களின் விலை ஏற்றத்தின் மத்தியில், உற்பத்தி ஒரு கூர்மையான சரிவினைக் கண்டது; தேவையும் ஜூன் மாதத்தில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது” என்று கூறியுள்ள ‘ஐஎச்எஸ் மார்கிட் இந்தியா’ நடப்பு 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் 9.5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனைமுன்பு, 10.5 சதவிகிதமாக ‘ஐஎச்எஸ் மார்கிட் இந்தியா’ கணித்திருந்த நிலையில், தற்போது அதில் 1 சதவிகிதத்தைக் குறைத்துள்ளது.

நாட்டில் கொரோனாவின் தாக்கம்குறையத் தொடங்கி, பொதுமுடக்க மும் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ள தற்போதைய நிலையில், இனிவரும் காலங்களில் தொழிற்துறையின் தேவை அதிகரித்து- அதன்மூலம் உற்பத்தியும் அதிகரிக்கலாம். இனி வரும் மாதங்களில் அது கணிசமான வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லலாம் என்று ‘ஐஎச்எஸ் மார்க்கிட் இந்தியா’வின்  பொருளாதார இணை இயக்குநர் டி. லிமா கூறியுள்ளார்.இந்திய உற்பத்தியாளர்கள் பொதுமுடக்கத்திற்கு முன்பு இருந்ததை விட, கணிசமான அளவில், மெதுவான வேகத்தில் தற்போது வளர்ச்சி கண்டு வருகின்றனர். குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர்கள், மற்ற தொழில்துறை குறித்தான குறியீடுகள் என அனைத்தும் மெதுவானவேகத்தில் வளர்ச்சி பாதையில் காணப்படுகின்றன. தேவை மெதுவான வேகத்தில் அதிகரித்து வருகின்றது. எனவே இனி வரும் மாதங்களில் தொழிற்துறை உற்பத்திக் குறியீடு இன்னும் வளர்ச்சி காணலாம் என்றுமேலும் அவர் நம்பிக்கை தெரி வித்துள்ளார்.

;