economics

img

மோடி அரசின் தனியார்மயத்தால் பறிபோகும் சமூகநீதி, இடஒதுக்கீடு.... மத்திய முன்னாள் அமைச்சர் கே.எச். முனியப்பா குற்றச்சாட்டு....

பெங்களூரு:
பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைகளால், சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடும், அதன்மூலமான லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு களும் பறிபோய்க் கொண்டிருப்பதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சரு மான கே.எச். முனியப்பா குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:மறைந்த முன்னாள் பிரதமர்இந்திரா காந்தி, இருபது அம்ச திட்டத்தை அறிமுகம் செய்த போது, நாட்டில் இயங்கிவந்த தனியார் வங்கிகளை அரசுடமையாக்கினார். பல தனியார் தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவன மாக மாற்றினார். இதனால் இடஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம்குடும்பங்கள் வளர்ச்சிஅடைந்தன. ஆனால், தற்போதைய ஆளும்பாஜக அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், நல்ல லாபத்தில் இயங்கி வரும் எல்ஐசி உள்ளிட்ட அரசுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தனியார் மயமாக்கி வருகிறது. 

மத்திய  அரசின் பிற்போக்கான இந்தப்பார்வை காரணமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்கள்வேலை வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் காலனி ஆதிக்கத்தின் கீழ் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே, தொலைபேசி உள்ளிட்ட நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதால், லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்ரத்தப் புரட்சி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படு வதற்கு இல்லை.  இவ்வாறு கே.எச். முனியப்பா கூறியுள்ளார்.

;