economics

img

30 ஆண்டுகளுக்கு முந்தைய சூழலை விட தற்போது மோசம்.. மீள முடியாத நெருக்கடியில் இந்தியப் பொருளாதாரம்.... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை...

புதுதில்லி:
இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டு இருப்பதாகவும், இதனைக் கண்டு, தாம்மிகவும் வருத்தம் அடைவதாகவும் முன்னாள்பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.1991-ஆம் ஆண்டு, தாம் ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபோது, ‘தனியார் மயம், தாராளமயம், உலக மயம்’ என்ற ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதன், 30-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, டாக்டர் மன்மோகன் சிங் அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்புஎன்னுடைய தலைமையில் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இப்போது நான் நினைவு கூறுகிறேன்.அப்போது என்னுடைய முதல் பட்ஜெட் உரையில் நான், விக்டர் ஹியூகோவின், ‘ஒருசிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால்உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்கமுடியாது’ என்ற புகழ்பெற்ற தத்துவத்தை அவையில் முன்மொழிந்திருந்தேன். ஆனால்,இன்று 30 வருடங்களுக்குப் பிறகு நாம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது,நாம் இன்னும் வெகுதூரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியைப்பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதே போல், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும் போது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதன் காரணமாக, நாம் ஏராளமான உயிர்களை இழந்துவிட்டோம்.இன்று இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இது நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நேரமல்ல. ஆராய்ந்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய நேரம். தற்போதைய பொருளாதார சூழலில், 1991 நெருக்கடி காலகட்டத்தை விடவும், வளர்ச்சியை நோக்கி முன்னேறும் நமதுபாதையானது மிகவும் மோசமாக இருக்கிறது. 

கொரோனா தொற்றால் சமீபமாக, நாம்சந்தித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன்.நாட்டிலுள்ள இப்போதைய மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாம்மீண்டுவர வேண்டும். ஒவ்வொரு இந்தியக்குடிமகனுக்கும் கண்ணியமான, ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு, நம்முடைய முன்னுரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்”. இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

;