economics

img

20.1 சதவிகித ஜிடிபி வளர்ச்சி? பழைய நிலைக்குத் திரும்பாத பொருளாதார வளர்ச்சி...

புதுதில்லி:
2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 20.1 சதவிகிதம் என்ற அளவில்வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) கூறியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) ஜிடிபி மதிப்பு 24.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு ரூ. 26 லட்சத்து 95 ஆயிரம் கோடியாகக் குறைந்தது.ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபிமதிப்பு ரூ. 32 லட்சத்து 38 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.கடந்த 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஜிடிபி வளர்ச்சி 20.1 சதவிகிதம் அதிகம் என்ற போதிலும்,கொரோனாவுக்கு முந்தைய 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவே ஆகும். அதாவது, கடந்த 2019-20 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ. 35 லட்சத்து 66 ஆயிரம் கோடியாகஇருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழிற்துறை, உற்பத்தித் துறை, சேவைத்துறை ஆகிய துறைகளின் வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கு பயன்படும் ஜிவிஏ-வும், (Gross Value Added - GVA) 2021-22 நிதியாண்டின் முதல்காலாண்டில், ரூ. 30 லட்சத்து 47 ஆயிரத்து 516 கோடியாக (18.8 சதவிகிதம்) அதிகரித்துள்ளது. முந்தைய 2020-21 நிதியாண்டில் இது ரூ.25 லட்சத்து 65 ஆயிரத்து 909 கோடியாகவே இருந்தது. 22.8 சதவிகிதம் சரிவைக் கண்டிருந்தது. அது தற்போது 18.8 சதவிகிதம் வளர்ந்துள்ளது. எனினும், கொரோனாவுக்கு முந்தைய 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டு வளர்ச்சியான ரூ. 33 லட்சத்து5 ஆயிரத்து 273 கோடியோடு ஒப்பிடுகையில் குறைவாகும்.ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை 2021 ஜூலை இறுதி நிலவரப்படி, ரூ. 3.21 லட்சம் கோடியாக உள்ளது என்று கணக்குகள் கட்டுப்பாட்டு அமைப்பு (சிஜிஏ) தெரிவித்துள்ளது. இது நடப்புநிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில் 21.3 சதவிகிதம்ஆகும். நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் ஒன்றிய அரசின்மொத்த வருவாய் ரூ. 6.83 லட்சம் கோடியாகவும், செலவினம் ரூ.10.04 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது.

;