districts

img

வேலூரில் மிதமான நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

வேலூர் அருகே இன்று(திங்கள்கிழமை) அதிகாலை 4 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் வேலூர் மாவட்டத்தின் மேற்கு, தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டிருப்பதாகவும், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையால், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

;