districts

தீபாவளி வரை கைத்தறி பட்டு ரகங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு

மேட்டுப்பாளையம், ஜூலை 27- தீபாவளி வரை கைத்தறி பட்டு ரகங்கள் குறைந்த விலையில் வாடிக்கையாளர்க ளுக்கு விற்பனை செய்ய கைத்தறி விற்பனை மற்றும் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள் ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் உள்ள சிறுமுகை பகுதி கைத்தறி பட்டு  ரகங்கள் உற்பத்தியில் தனிச்சிறப்பு பெற்றது. இங்கு கைத்தறியில் நெய்து தயாராகும் மென் பட்டு, கோரா பட்டு போன்ற சேலைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இங்குள்ள நெசவாளர்கள் தங்களது நுணுக்க மான கைத்திறனால் சிறந்த கலைஞர்களுக் கான ஒன்றிய, மாநில விருதுகளை பெற்றுள்ள னர். ஆண்டுக்கு சுமார் ரூ50 கோடி வரையி லான மதிப்புள்ள கைத்தறி பட்டு சேலைகள் உற்பத்தியும், விற்பனையும் நடைபெற்று வந்த சிறுமுகை பகுதி கொரோனா கால முடக்கதால் முடங்கி போனது.

மொத்த மற்றும் சில்லறை விற்பனை ஒட்டுமொத்தமாக சரிந்து கைத்தறி தொழிலே கேள்விக்குறியானது. விற்பனையின்றி தறிகள் இயக்கப்படாததால் கைத்தறி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமையில் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறுமுகையில் கூடிய கைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் கள் சங்கத்தினர், வரும் தீபாவளி பண்டிகை வரை கைத்தறி பட்டு சேலைகளை மொத்த  வியாபாரிகளுக்கு விற்கப்படும் விலைக்கே ஒன்றிரண்டு சேலைகள் வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கும் சில்லறை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இம்முடிவு கொரோனா முடக்கதால் வாங்கும் சக்தி குறைந்த வாடிக்கையாளர்க ளையும், நலிவடைந்த நிலையில் உள்ள கைத்தறி நெசவாளர்களையும் ஊக்கப்படுத் தும் என கைத்தறி உற்பத்தியாளர்கள் தெரி வித்துள்ளனர்.  மேலும், கைத்தறி பயன் பாட்டை ஊக்கமடைய செய்யும் வகையில், “அரசு ஊழியர்கள் வாரத்தில் இரு நாட்கள் கைத்தறி ஆடையை அணிய வேண்டும்” என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

;