districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

திருவில்லிபுத்தூர், மம்சாபுரம் பேரூராட்சியில் 4-ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சந்தனமாரிக்கு ஆதரவாக சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், ஒன்றிய செயலாளர் எஸ்.வி.சசிகுமார், கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பெரியகுளம் நகராட்சி 13-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மார்க்‌சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.மதன்குமாரை ஆதரித்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.மூக்கையா வாக்கு சேகரித்தார். இதில், கட்சியின் மூத்த தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் வடுகபட்டி பேரூராட்சியில் 6-ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் உமாமகேஸ்வரிக்கு ஆதரவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.இராமச்சந்திரன், எஸ்.வெண்மணி, தாலுகா குழு உறுப்பினர் எஸ்.கணேசன், கே.கோமதி, சிஐடியு தலைவர் ஜி.சண்முகம் வாக்கு சேகரித்தனர்.