districts

img

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

விருதுநகர், ஜூன் 7-  மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை  எதிர்த்து நாடு முழுவதும் போராடி உயிர்நீத்த விவ சாயிகளின் குடும்பங்க ளுக்கு ஒன்றிய பாஜக அரசு  உரிய நிவாரணம் வழங்க  வேண்டும் என்று விருதுநக ரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விருது நகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியதாவது: இந்தியா முழுவதும் விவ சாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டும் என்பதை சட்ட மாக்க வேண்டும், கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவேற்  றப்பட்ட மின்சார மசோதா வை கைவிட வேண்டும் உத்தரப்பிரதேச மாநிலம்  லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகன்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயி கள் மீது போட்ட பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இச்  சட்டத்திற்கு எதிராக போராடி  உயிர் நீத்த 712 விவசாய குடும்பங்களுக்கு உரிய  நிவாரணம் வழங்க வேண் டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது.  இச்சந்திப்பில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் வி. முருகன், தென்னை விவ சாயிகள் சங்க மாநில செய லாளர் அ.விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்ட தலைவர் சக்கணன், முத்  துக்குமார், வாழும் விவசாயி கள் சங்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் காளி தாஸ் மற்றும் நிர்வாகிகள் மனோஜ்குமார், சுப்புராஜ்,  பெருமாள்ராஜ், மங்கை யர்கரசி உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

;