districts

மதுரை முக்கிய செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள்

தூத்துக்குடி,ஆக. 18 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சலவையாளர் பணியிடங்களுக்கு பெண்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இனசுழற்சி முறை: I - சமையலர் - காலிப்பணி யிடங்கள் - 1 ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படை யில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority - (Women/ Destitute Widow) - 1 Post. இன சுழற்சி முறை: II - சலவையாளர் - காலிப்பணியிடங்கள் - 1  ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததி யினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) - Priority - (Women /Destitute Widow) - 1 Post இரு பதவிக ளுக்கும் ஊதிய விகிதம் நிலை 1 ரூ.15700 - 58100, கல்வித் தகுதி : தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு:01.01.2022 அன்று SC/ST - 18- 37, MBC/BC - 18 - 34, 0C - 18 -32 மாற்றுத்திறனாளி - 42. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31/08/2022 மாலை 5 மணி வரை. (விண்ணப்பம், கல்வித்தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை நகலாக இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்) முன்னுரிமை பெற்ற வர்கள் உரிய சான்றிதழ் இணைக்க வேண்டும். நிர்ண யிக்கப்பட்ட 31/08/2022 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப் பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ.) மரு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தச்சநல்லூர் நெல்லை மண்டல பகுதிகளில்  6 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நடவடிக்கை

திருநெல்வேலி, ஆக. 18 நெல்லை மாநகராட்சியில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கட்டடங்களில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தச்சநல்லூர் மண்டலத்தில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கட்ராமன் தலைமை யில் உடையார்பட்டி சாலைத்தெருவில் 2 கட்டிடங்கள், நெல்லை மண்டலத்தில் பாண்டியாபுரம் வடக்கு தெரு வில் ஒரு கட்டடம், திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெரு வில் ஒரு கட்டிடம், தெற்கு மவுண்டு ரோடு பகுதியில் 2 கட்டடங்கள் என மொத்தம் 6 கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனவே மாநகராட்சிக்கு நிலுவை வரி பாக்கிகளை உடனே கணினி வரி வசூல் மையத்தில் செலுத்துமாறு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லையில் நாளை  மின்தடை ஏற்படும் இடங்கள்

திருநெல்வேலி, ஆக .18- பாளை மற்றும் மேலப்பாளையம் துணைமின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மின்தடை ஏற்படும் இடங்கள்: மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலா மணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம் புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம். பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர்,மகிழ்ச்சி நகர், திருநகர், திரு மால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம். சமாதானபுரம், கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாக ராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலக்கல்லூர் துணை மின் நிலை யத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்த மல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர் குளம், வெள்ளாளன்குளத்தில் மின்வினியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

சிறுமியிடம் தவறாக நடந்த  2 பேருக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி, ஆக .18- சிறுமியிடம் தவறாக நடந்த 2 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.  நெல்லை மாவட்டம் ராதாபுரம் மார்க்கெட் தெருவை  சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 28), தினேஷ் (25). இவர்கள் 2 பேரும் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராதா புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டி, தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.  இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி குற்றவாளிகளான துரைப் பாண்டி, தினேஷ் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கை :  ஆக. 25 வரை விண்ணப்பிக்கலாம்!

தூத்துக்குடி,ஆக. 18 தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு ஆக.25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு 25.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாகவோ அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பித்து பின் தற்காலிக ஒதுக்கீடு ஆணையினை உறுதி செய்து தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 27.08.2022 அன்று வந்து சேர்ந்து கொள்ளலாம். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசால் விலையில்லா உபகரணங்கள், மாதந்தோறும் உதவித் தொகைரூ.750 (வருகை நாட்களுக்கு ஏற்ப), கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை – ஒருசெட், விலையில்லா காலணி – ஒரு செட், பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/முதல்வரை 0461-2340133 மற்றும் 9442259945, 8925374688, 9487986493 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையம் துணை இயக்குநர் / முதல்வர் வா.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ரூ.150 இலட்சம் வரை மானியத்துடன் தொழில் தொடங்க டிஐஐசி அழைப்பு செப்.2 வரை கடன் வழங்கும் விழா

நாகர்கோவில், ஆக.18- புதிதாக தொடங்கப் படும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள் ளார்.  இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண் ்ணற்ற தொழிற்சாலை களுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கி றது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்/சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை/சேவை நிறுவனங்களை நிறு வுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத் தின் கீழ் கடனுதவி  வழங்கி வருகிறது. நாகர்கோவில் கிளை அலுவலகத்தில் (முகவரி:-143 (பழைய எண்.37) கேப் ரோடு, வேப்பமூடு ஜங்சன்  அருகில் நாகர்கோவில்) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 17.08.2022 முதல் 02.09.2022 வரை நாகர்கோவில் கிளை அலுவலகத்தில்  நடை பெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானி யங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEE DS) போன்ற திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங் கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25சதவீத  முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை வழங்கப் படும்.  இந்த விழா காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50  விழுக்காடு சலுகை அளிக் கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் /தொழிலதிபர்கள் பயன் படுத்தி தொழில் திட்டங்க ளுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன் படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு 04652 -225774, 232859 என்ற எண் ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டுமென என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் வீடுகள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு:‍ 2 பேர் கைது

தூத்துக்குடி,ஆக. 18 தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக மண் ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து வீடுகள் மீது வீசிய 2பேரை காவல்துறை கைது செய்தது. தூத்துக்குடி முனியசாமிபுரம் லோகியா நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் வடமுத்து (எ) முத்துகுமார் (34) மற்றும் மூக்கையா மகன் சுரேஷ் (25) ஆகி யோருக்கும் முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மகன் சதீஷ்குமார் (34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பரான கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ்குமார் (22) ஆகிய இரு வரும் புதனன்று மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை  பற்ற வைத்து அதை சுரேஷ் மற்றும் வடமுத்து (எ) முத்துக்குமார் வீடுகளின் சுவரில் எறிந்துள்ளனர். இதில் வடமுத்து (எ) முத்துக்குமார் வீட்டு வாசலில் இருந்த லைட் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து வடமுத்து (எ) முத்துக்குமார் மனைவி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எதிரி சதீஷ்குமார் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், எதிரி சுரேஷ்குமார் மீது 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

தென்காசி, ஆக.  18 தென்காசி மாவட்டம்,தென்காசி காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி மவுண்ட் ரோட்டை சேர்ந்த அபுல் ஹசன் என்பவரின் மகனான செய்யது சுலைமான்(39) என்ற நபர் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினார். அதன் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் வியாழனன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1000 மையங்களில்  மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி, ஆக. 18 தென்காசி மாவட்டத்தில் 21.08.2022 ஞாயிற்றுக் கிழமையன்று 1000 மையங்களில் சிறப்பு மெகா கொரோ னா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட  வேண்டியவர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவுபெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர், முன்னெச்சரிக்கை  தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. காலை, நண்பகல், பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ள வார்டு பகுதிகள்,  பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைமற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.  இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

நெல்லையில் செப்.2 வரை சிறப்பு தொழில் கடன் முகாம்    

தென்காசி , ஆக. 18 தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,  திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் (5ஊஃ5டீஇ ஹோட்டல் சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்  2ஆவது மாடி, திருவனந்தபுரம் ரோடு,   வண்ணார்பேட்டை, திருநெல்வேலி – 627003) குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம்  17.08.2022 முதல் 02.09.2022 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சிறப்பு தொழில்கடன் முகாமில் டி.ஐ.ஐ.சியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள்  மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள்,  புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25சதவீதம்  முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்/தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய,மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் முகாமின் சிறப்பு அம்சமாக 27.08.2022 அன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தின் சார்பாக திருநெல்வேலி,  தூத்துக்குடி,  விருதுநகர்,  கன்னியாகுமரி மாவட்டங்கள் இணைந்து நடத்தும் சிறப்பு  தொழிற்கடன் விழா பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, வண்ணார்பேட்டை, திருநெல்வேலியில் உள்ள கலையரங்கில் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 9445023492 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் அருகே ரயில் மோதி மாணவர் பலி

மதுரை, ஆக.18- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே  சுங்கு ராம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன்  காளிதாஸ் (19). இவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள  கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காளிதாஸ் விரக்தியுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாயன்று இரவு  காளிதாஸ் வெளியே சென்றுவிட்டு வருவதாக வீட்டில்  கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வீடு  திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்து காண வில்லை. புதனன்று காலை மறவன்குளம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் இறந்து கிடப்பதாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். காவல் துறை விசாரணையில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தது காளிதாஸ் என தெரிய‘வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவேகானந்தர் மண்டபத்திலிருந்து  திருவள்ளுவர் சிலைக்கு பாலம்

நாகர்கோவில், ஆக.18- கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளு வர் சிலையில் பராமரிப்பு பணியை தமிழக சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராமகிருஷ்ணன் தலைமை யில் எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சட்டமன்ற குழு தலைவர் ராமகிருஷ்ணன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:  கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந் துள்ள பாறையில் 2000ஆம் ஆண்டில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி யால் திறந்து வைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடல் நடுவில் அமைந் துள்ளதால் கடல் உப்பு காற்றினால் சேதம் அடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் 2 மாதங்களில் முடிவடையும். அதன் பிறகு ஆன்மீக அன்பர்களும், சுற்றுலா பயணி களும், பக்தர்களும் ஒரே நேரத்தில் விவே கானந்தர் நினைவு மண்டபத்தையும் திரு வள்ளுவர் சிலையையும் சென்று பார்ப்ப தற்கு வசதியாக இவை இரண்டுக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் இணைப்பு பாலம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத் தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளார். இந்த இணைப்பு பாலம் அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்புவதாக கூறினார்.


 

;