சதை தேரா?
மனசை சிதைத்தாளா?
காதல் விதைத்தாளா?
படு குழியில் புதைத்தாளா?
உதட்டு விசில் அடித்தாளா?
ஒரு வெற்றிலையாய் மடித்தாளா?
தாய் மடியா?
நான் சுமக்கும் காவடியா?
உளம் எரிக்கும் அக்னியா?
உயிர் சுமக்கும் பத்தினியா?
மதில் மேல் பூனையா?
பதில் தரும் வேலையா?
ஆற்றில் இறங்க துணிந்தேன் நான்.
ஆழம் நினைத்தா பயம் கொள்வேன்
- ஜீவி