districts

img

மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

மதுரை, ஆக.8- மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நேரடி சிறப்பு  முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெற்றனர் உலகிலேயே முன்மாதிரி திட்டமான  மாற்றுத்திறனாளிகளுக்கான “உரிமை கள்” (RIGHTS)  என்ற திட்டம் 1,709 கோடி  ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுச் செயல்  படுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில்  நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் மூல மாக நலத்திட்ட உதவிகள் வழங்குவ தற்கான ஒருங்கிணைந்த சிறப்பு மதிப்பீட்டு முகாம் மூன்று கட்டங்களாக மதுரை மத்திய  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  நடைபெற்று வருகிறது.

அதன்படி மதுரை  மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற்றது  ஆகஸ்ட்  8 அன்று   சுந்தரராஜபுரம் ரத்தினபுரம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார  வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 325 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.இதில் புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற 72 பேரும் புதுப்பிக்க 23 பேரும் விண் ணப்பித்து உள்ளனர்.50 மாற்றுத்திறனாளி கள் தனித்துவ அடையாள அட்டை பெறவும் பதிவு செய்துள்ளனர்.சிற்பபு வாகனம் பெற 13 பேரும்,மாற்றுத்திறனாளிகள் உத வித்தொகை பெற 10 பேரும் ,மத்திய கூட்டு றவு வங்கி உதவி பெற 13 பேரும்,ஆவின் பூத் கேட்டு 8  பேரும்,வேலை வேண்டி 10  பேரும்,இலவச பயிற்சி வகுப்புகள் வேண்டி  5 பேரும்,வேலைவாய்ப்பற்றோர் உத வித்தொகை பெற 2 பேரும் ,குடிசை மாற்று  வாரியத்தின் கீழ் வீடுகள் பெற 18 பேர் என 18  பிரிவின் கீழ் 122  மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். இந்த முகாமினை தொடங்கி வைத்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர்,மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மதுரை மாநகராட்சி மேயர்  வ.இந்திராணி ஆகியோர் பார்வையிட்ட னர்.இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி  மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்  றும் பலர்  கலந்து கொண்டனர்.

;