districts

img

பிளாஸ்டிக் பாட்டில் குளிர்பானங்களுக்கு தடை விதிக்க கலர், சோடா உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

தூத்துக்குடி,அக்.25 பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான குளிர் பானங்களையும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சோடா மற்றும் கலர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் நல்லகண்ணன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:  தூத்துக்குடி மாவட்ட சோடா கலர் உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சிறு சிறு கண்ணாடி பாட்டிலில் சோடா கலர் தயா ரிக்கும் உற்பத்தியாளர்களின் நலனுக்காக செயல்படுகிறது. சில ஆண்டுகளாக பெட்ரோலிய கழிவிலிருந்து தயாரிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிர்பானங்கள் விற்பனைக்கு வந்ததால், கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் தயாரிக்கும் எங்கள் தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. அதனால் நூற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் தயா ரிக்கும் சிறு சிறு உற்பத்தியாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனர். காலங் காலமாக குடிசைத் தொழிலாக கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் (கோலிசோ டா) தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் மீது எந்தவிதமான அதிருப்தியும் பொதுமக்களிடம் ஏற்பட்டதில்லை. பெட்ரோலிய கழிவிலிருந்து தயாரிக்கும் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள வேதிப் பொருளால் வேதிவினையாகி குளிர்பானங்கள் விஷத்தன்மை அடை கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் குளிர்பா னங்கள் அருந்தும் சிறுவர்களின் நன்மை கருதி பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை க்கு சந்தைக்கு வரும் அனைத்து வகை யான குளிர்பானங்களை உடனே தடை செய்ய வேண்டும். காலங்காலமாக குடிசைத்தொழிலாக  கண்ணாடி பாட்டில் குளிர்பானம்  விற்பனை மாவட்டத்தில் உள்ள 500 மேற்பட்ட குடும்பத்தின் வறு மையை போக்கும் விதமாக  இருந்தது, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளனர்.

;