districts

img

புதர் மண்டிக்கிடக்கும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம்

மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை!

தூத்துக்குடி,அக்.19 எட்டையபுரத்தில் பாது காப்பற்ற நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் காணப்படுவதால் மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள் ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மகா கவி பாரதி  பிறந்த மண்ணான  எட்டையபுரத்தில் செயல்பட்டு வரும் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பல் தொழில்நுட்பக் கல்லூரியில் எவ்வித பராமரிப்புப் பணிகளும் செய்யப்படாமல் இருப்பதால், இக்கல்லூரியானது கருவேல மரங்களால் சூழ்ந்து புதர் மண்டிய காடுகளாக காட்சி யளிக்கிறது. இதனால் விஷ ஜந்துக்களின் அச்சத்திலேயே இக்கல்லூரியின் மாணவிகள் பாதுகாப்பற்ற நிலையில் பயின்று வருகின்றனர். மேலும் இந்த மகளிர் பாலி டெக்னிக் கல்லூரி மற்றும் மாணவியர் விடுதி அடங்கிய ஒருங்கிணைந்த வளாகத்தின் சுற்றுச்சுவரின் உயரமானது மிகக் குறைவான அளவிலும், அனேக இடங்களில் சுற்றுச் சுவர் காணாமலும் போயுள்ளது. மதுப்பிரியர்கள் சிலர் தங்க ளின் இச்சைகளுக்கு இந்த கல்லூரி வளாகத்தை பயன் படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆகை யால், அரசும் – கல்லூரி நிர்வாக மும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. மகாகவி பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், பாரதியா ரின் நினைவினைப் போற்றும் விதமாக கடந்த 1982-ம் ஆண்டு இந்த பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பல் தொழில்நுட்பக் கல்லூரியா னது துவங்கப்பட்டு 39 ஆண்டு களாக இயங்கி வருகிறது.

 இந்த அரசு மகளிர் பாலி டெக்னிக் கல்லூரியில், இப்பகு தியில் உள்ள கிராமப்புற மாணவிகள் முதல் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராள மான மாணவிகள் கலந்தாய் வின் மூலம் மதிப்பெண் அடிப்ப டையில் சேர்க்கை பெற்று பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் பயிற்று விக்கப்படும் 6 பாடப்பிரிவு களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், கல்லூரியானது முறையான பராமரிப்பின்றி புதர் மண்டி, கருவேலமரங்கள் சூழ்ந்து அடர்ந்த காடு போல காட்சியளிக்கின்றது. இவ்வாறு கல்லூரி வளாகம், மாணவியர் விடுதி, விளையாட்டு மைதா னம் என அனைத்து பகுதிகளி லும் புதர்மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் ஆபத்தான நிலை யில் அச்சத்திலேயே இக் கல்லூரி மாணவிகள் பயின்று வருகின்றனர். பல கனவுகளோடு தங்க ளின் இலட்சியத்தை நினை வாக்க, தனியார் கல்லூரிக்கு சென்றால் அதிகமான பணம் செலவாகும் என்று அரசு பாலிடெக்னிக் கல்லூரியான இக்கல்லூரியை தேடிவந்த பல மாணவிகளின் பாது காப்பினை உறுதி செய்ய தமிழக அரசும், மாவட்ட நிர்வா கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

;