districts

img

மூவாயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

குழித்துறை,அக். 27 வருவாய்த்துறை பறக்கும் படை தனி வட்டாட்சியர் அப்துல்லா மன்னான்   தலைமை யில் 26ம்தேதி இரவு  துணை வட்டாட்சியர் குழந்தை ராணி  நாச்சியார். தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஓட்டுநர் டேவிட் ஆகியோர் கொண்ட குழு மங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் (பொலேரோ‌‌)ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டு நர் ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சிறுசிறு மூடைகளில் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை சோதனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த இன்னொரு வாகன ஓட்டியும் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடிவிட்டார். அந்த வாகனத்தை சோதனை செய்த போது சிறுசிறு மூடைகளில் சுமார் 2000 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அரிசியும் வாக னமும் பறிமுதல் செய்யப்பட்டு அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப் பட்டது. வாகனங்கள் விள வங்கோடு வட்டாட்சியர் அலுவ லகத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரிசியை கொண்டு வந்த நபர்கள் யார் என்பது பற்றி  விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

;