districts

img

வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் மக்கள் விரோத மோடி அரசைக் கண்டித்து போராட்டம்

சாத்தூர், ஆக.8- சாத்தூரில்  “வெள்ளையனே வெளியேறு“ இயக்க நாளை யொட்டி ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய அளவில் ஆகஸ்ட் 8 வெள்ளையனே வெளி யேறு இயக்கம் நடைபெற்ற நாளா கும். இந்நிலையில், சிஐடியு, தமிழ்  நாடு விவசாயிகள் சங்கம், அகில  இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடைப்பிடித்து வரும்  மக்கள் விரோத,  தொழிலாளர் விரோ தக் கொள்கைகளைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு   கன்வீனர்   ஏ.சீனிவாசன் தலைமை யேற்றார். துவக்கி வைத்து  சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே விஜயகுமார் பேசினார். விவசாயிகள் சங்க  மாவட்ட பொருளாளர்  எஸ்.மனோஜ் குமார் விளக்கிப் பேசினார். முடி வில்,  சிஐடியு மாவட்ட செயலாளர்  பி.என்.தேவா கண்டன உரையாற்றி னார். இதில்,  சிஐடியு மாவட்ட குழு  உறுப்பினர் எம் சி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேனி

தேனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு  விவ சாய தொழிலாளர் சங்க தேனி மாவட்டத் தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு தலைமை வகித்தார். சிஐடியு தேனி மாவட்டத் தலைவர் சி.முரு கன் முன்னிலை வகித்தார். சிஐடியு தேனி மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் .ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், விதொச மாவட்ட பொருளாளர் கே.தயாளன் விவசாயி கள் சங்க தலைவர்கள் வி.என்.ராம ராஜ், பொன்னுத்துரை ,மாதர் சங்க மாவட்ட செயலாளர் சு.வெண்மணி,  வாலிபர் சங்க செயலாளர் டி.நாக ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இராஜபாளையம் 

விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் ஜவகர் மைதானத்தில் வைத்து சிஐடியு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். நகர சிஐடியு கன்வீனர் எம்.  சுப்பிரமணியன் தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் ஜி.கணேசன், சாலைப்போக்கு வரத்து சங்க மாவட்ட பொதுச்செய லாளர் எம். திருமலை, தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.  சோமசுந்தரம் கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ராமர் விவசாய தொழிலாளர் சங்  கத்தின் மாவட்ட பொருளாளர் சி.  ஜோதிலட்சுமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

;