districts

img

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் நாளிதழ் தீக்கதிர் வளர்ச்சியில் உத்வேகத்துடன் பங்கேற்றிடுக!

மதுரை, அக்.16- உழைக்கும் மக்களின் உரிமைக ளுக்காக குரல் எழுப்பும் தீக்கதிர் நாளி தழின் வளர்ச்சியில் நாம் அனைவரும் உத்வேகத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி அழைப்பு விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  அரசரடி பகுதிக்குழுவில் கோச்சடையில் உள்ள தோழர் தில்லை வனம் படிப்பகம் சார்பில் கொடி யேற்றம் மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழ னன்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் இரா. லெனின் தலைமை வகித்தார். கட்சியின் அரசி யல்  தலைமைக்குழு உறுப்பினர் எம். ஏ. பேபி,  தியாகிகள் கே. பி. ஜானகியம் மாள், தில்லைவனம் ஆகியோர் உரு வப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கட்சிக் கொடி யினை ஏற்றிவைத்து உறையாற்றினார். அவர் பேசியதாவது:  இந்த கொடியேற்றும் நிகழ்ச்சி யில் நீங்கள் எத்தகைய உற்சாகத்து டனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண் டுள்ளீர்களோ அதே போன்று நமது இயக்கத்தின் கொள்கை ஆயுதமான தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சியிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் தியாகிகளான தில்லைவனம், ஜானகியம்மாள் போன்றவர்கள் உயர்த்திப் பிடித்த சமத்துவம், சமூகநீதி போன்றவற்றை முன்னெடுத்துச் செல்லும் தீக்கதி ருக்கு சந்தாதாரர்களைச் சேர்ப்பதிலும் அதன் விற்பனையை அதிகரிப்பதிலும் நாம் மிகுந்த உற்சாகத்துடன் பணி யாற்ற வேண்டும். தீக்கதிர் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் எந்தவித சமரசமுமின்றிப் போராடிவருவதை நீங்கள் அறிவீர்கள். நமது தேசம் சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டில் நாம் இருக்கின்றோம். மகாத்மா காந்தி, பகத்சிங் போன்ற வர்களின் தியாகத்தல் கிடைத்த சுதந்தி ரத்திற்கு இன்றைய கேடுகெட்ட ஆட்சி யாளர்களால் ஆபத்து வந்துள்ளதை நாம் உணராமல் இருக்க முடியாது. நாட்டையே விற்றழிக்கும் முயற்சியில் இன்றைய நரேந்திர மோடி தலைமை யிலான அரசு ஈடுபட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் கல்வி என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இணையவழிக்கல்வி எளியவர்களை எங்கோ கொண்டு நிறுத்தியுள்ளது.  

தனது ஆவேசமான எழுத்து மற்றும் எழுச்சிமிகு கவிதைகள் மூலம் இளைஞர்கள் ,பெண்கள், முதிய வர்கள் என்று அனைவரிடமும் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய சுப்பிர மணிய பாரதியின் நினைவு நூற்றாண் டாகும் இந்த ஆண்டு. மகாத்மா காந்தி,  பகத்சிங் போன்றவர்களின் தியாகத் தால் கிடைத்த சுதந்திரத்தை நாம் பாது காத்திட வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறைக் கொடுமைகளை அனுபவித்த தோழர் சங்கரய்யா இன்றும் வாழும் வரலாறாக நம்மிடையே உள்ளார்.  கல்வி, வேலையின்மை, பெண் சமத்துவம், சமூக நீதி இவற்றிற்கான நமது தொடர் போராட்ட வடிவங்களை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சியில் நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட வேண்டுமென மீண்டும் ஒரு முறை  உங்களைக் கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு அவர் பேசினார். எம்.ஏ.பேபியின் மலையாள உரையை தீக்கதிர் ஊழியர் மு.சங்கரநயினார் தமிழில் மொழிபெயர்த்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினரும் தீக்கதிர் பொறுப்பாசி ரியருமான  எஸ். பி. ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மா. கணேசன், ம. பாலசுப்பிரமணியம், பகுதிக்குழு செயலாளர் கு. கணேசன், போக்குவரத்து இடைக்கமிட்டி செய லாளர் எஸ். அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பகுதிக்குழு உறுப்பினர் தங்கவேலு நன்றி கூறினார்.

;