districts

img

குடிநீர், சாலை, பேருந்து நிறுத்தம் வசதி கேட்டு மறியலுக்கு திரண்ட விவசாயிகள்- அருந்ததிய மக்கள்

இராமநாதபுரம்,ஆக.19- இராமநாதபுரம் மாவட்டம்  கட லாடி அருகே சிக்கல்  காந்திநகர்  அருந்ததியர் மக்களுக்கு   குடிநீர், சாலை வசதி,பேருந்து நிறுத்தம் கேட்டு  விவசாயிகள் சங்கம் அருந்ததியர் மக்கள் சாலை மறியலுக்கு திரண்டனர். கடலாடி  வட்டம் சிக்கல் ஊராட்சி நான்கா வது வார்டு காந்திநகர் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில்  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தியும் கடந்த  26. 1. 2022 அன்று கிராமசபை  கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 23. 5. 2022 மற்றும் 2. 6. 2022 அன்று மனு அளிக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் காந்திநகர் அருந்த தியர் மக்கள் சார்பாக சிக்கல் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் நடைபெறும் என்று அறி விக்கப்பட்டு வெள்ளிக்கிழமை யன்று  போராட்டத்திற்கு மக்கள் திரண்டனர். இதனிடையே வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், காவல்துறையினர்,  ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வா கிகள் மற்றும்  கிராம பொதுமக்கள் ஆகியோருக்கு தகவல் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். சிக்கல் ஊராட்சி மன்ற அலுவல கத்தில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதில், உடனடியாக காந்தி நகர் அருந்ததிய மக்களுக்கு 4000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி வைத்து தண்ணீர் வழங்குவது என்றும் குடியிருப்பு மக்களுக்கு  குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது,  காந்திநகர் அருந்ததிய மக்களுக்கு மயானம் மற்றும்   சாலை வசதி, அரசு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்திக் கொடுப்பது என அதிகாரிகள், விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் காந்தி நகர் அருந்ததிய மக்களிடம் உறுதியளித்தனர். கடலாடி வட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில்   கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ,மண்டல துணை வட்டாட்சியர் ,சிக்கல் காவல் ஆய்வாளர் ,வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலு வலர், சிக்கல் ஊராட்சி மன்ற தலை வர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. மயில்வாகனன் ,தாலுகா செயலா ளர் எம்.சுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா செயலாளர் போஸ், சிஐ டியு மாவட்ட நிர்வாகி கே.பச்சமால், சிபிஎம் நகரச் செயலாளர் அம்ஜத் கான்,தாலுகாக்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் பிரான்சிஸ், கிராமத் தலைவர் கண்ணாயிரம் மற்றும் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;