districts

img

நகைகளை தனியார் வங்கிக்கு மாற்றி ரூ.1 கோடி மோசடி புகார் திண்டுக்கல் அருகே கூட்டுறவு சங்கத்தை கிராம மக்கள் - சிபிஎம் முற்றுகை

திண்டுக்கல், ஆக.6-  திண்டுக்கல் அருகே வெள்ள பொம்மன்பட்டி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கத்தில்   வைக்கப்பட்ட நகைகளை தனி யார் வங்கிக்கு மாற்றி வைத்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த தைக்  கண்டித்து கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே உள்ள வெள்ள பொம்மன்பட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்  தில்  செயலராக பணியாற்றுபவர் மணிவண்ணன். இந்த கூட்டு றவு சங்கத்தில் சுமார் 188 பேர்  நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். செயலர் மணி வண்ணன் இந்த நகைகளுக்கு பதி லாக போலியான கவரிங் நகை களை சொசைட்டியில் வைத்து விட்டு உண்மையான நகைகளை வடமதுரையில் உள்ள கேரளா வைச் சேர்ந்த தனியார் வங்கியில் அடகு வைத்து மோசடி செய்துள்  ளார். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரி யவருகிறது. இது தொடரபாக கூட்டு றவுத் துறை அதிகாரி செல்வராஜ் தலைமையிலான குழுவினர் விசா ரணை செய்தததில் செயலர் மணி வண்ணன் முறைகேட்டில் ஈடுபட்  டது தெரியவந்தது.

17 பேர்களின் நகைகள் மூலம் கிட்டத்தட்ட 23 லட்சத்து 73 ஆயிரம் கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இதனையடுத்து செயலர் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்து  நகையை அட மானம் வைத்த நபர்கள் சனிக்கிழ மையன்று கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்  பாக மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் டி.முத்துச்சாமி,  ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி. ஓன்றியக்  குழு உறுப்பினர்கள் எம்.கே.சம்சு தீன், முருகன், சண்முகம், மருதை (விதொச)  உள்ளிட்ட தலைவர்கள்  பங்கேற்றனர். இதனையடுத்து வேடசந்தூர் தாசில்தார் சக்திவேல் மற்றும் வடமதுரை போலீசார் போராட்டம் நடத்திய நகை உரிமை யாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கட்சியின் ஒன்றியச்செயலாளர் மலைச்சாமி, திமுக ஒன்றியச்செய லாளர் சுப்பையா, அய்யலூர் பேரூ ராட்சி தலைவர் கருப்பன், வட மதுரை பேரூராட்சித்தலைவர் கணேசன், திமுக முன்னாள் ஒன்றி யச்செயலாளர் ஆர்.பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 2 ஆம் தேதி முதல் விசா ரணை நடைபெற்று வருகிறது. விசா ரணை அறிக்கை ஒரு வார காலத்  தில் கொடுக்கப்படும். பாதிக்கப்பட்  டவர்களுக்கு உரிய நகைகள் மீட்டு  கொடுக்கப்படும் என்று கூட்டுறவு அதிகாரிகள், வட்டாட்சியர் சக்தி வேல் ஆகியோர் உறுதியளித்தனர்.

;