districts

img

25 சதவீத போனஸ் வழங்குக! சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,அக். 27 ஹாட் சன் பால் உற்பத்தி நிறு வனத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி சிதம்பரம் நகரில் ஹட்சன் பால் உற்பத்தி நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும் 25 சதவீத போனஸ் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் ,தொழிற்சங்கங்களை அழைத்து போனஸ் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரசல், ஆட்டோ சங்கம் முருகன், பொது தொழிலாளர் சங்கம் பெருமாள், முடி திருத்துவோர் சங்க மாவட்ட தலைவர் டென்சிங், செயலாளர் நம்பிராஜன், உப்பு தொழிலாளர் சங்க சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;