districts

img

இலங்கையில் கடற்கரை படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்க கோரி அமைச்சரிடம் நாகைமாலி எம்எல்ஏ வலியுறுத்தல்

நாகப்பட்டினம், அக். 17 - நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டை கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்தது. அந்த மீனவர்களை விடு விக்கக்கோரி கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி தலைமையில் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட அக்கரைப்பேட்டை கிராம த்திலிருந்து கடந்த 11 ஆம் தேதி மீன்பிடிக்க  சென்ற 23 மீனவர்களை, இலங்கை ராணு வம் அக்.13 ஆம் தேதி கைது செய்தது. அக்க ரைபேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த சிவக் குமார் மற்றும் சிவநேசன் ஆகிய இருவரின் விசைப்படகுகளில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  பிடிபட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்த கோரி அக்க ரைப்பேட்டை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொது மக்கள் சார்பில் கீழ்வேளூர் சட்டமன்ற  உறுப்பினர் நாகைமாலியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதனடிப்படையில் சனிக்கிழமை மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் என். கௌதமன், மாவட்ட திமுக துணை செயலாளர் மனோகரன் மற்றும் கிராம  பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

;