districts

img

சிவகங்கை நகராட்சியில் அமைச்சர் பிரச்சாரம்

சிவகங்கை, பிப்.16- சிவகங்கை நகராட்சியில் போட்டியிடும் 27-ஆவது வார்டு வேட்பாளர் துரை ஆனந்த், 1-ஆவது வார்டு வேட்பாளர் கார் கண்ணன், 21-ஆவது வார்டு வேட்பாளர் அயூப் கான்,  3-ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் முருக வள்ளி ஆகியோர் உள்ளிட்ட 27 வார்டு வேட்பா ளர்களை ஆதரித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், முன்னாள் அமைச் சர் தென்னவன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ குண சேகரன், திமுக மாவட்ட துணை செயலாளர் காஞ்சங்காடு, ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரத்தினம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் அழகர்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.