districts

img

மதுரை எகனாமிக் சேம்பர் ஷாப்பிங் திருவிழா சு.வெங்கடேசன் எம்.பி., துவக்கி வைத்தார்

மதுரை, டிச. 25-  மதுரை எகனாமிம் சேம்பர் நடத்தும் 2021 - மதுரை எகனாமிக் சேம்பர்  ஷாப்பிங் திருவிழா,  வீட்டு  உபயோக மற்றும் சிறு நிறு வன உற்பத்தி பொருள் கண் காட்சி மதுரை மடீசியா ஹாலில் சனி மற்றும் ஞாயிறு கிழமை களில் நடைபெறுகிறது கண் காட்சியினை மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.  நவாஸ் கனி ஆகியோர் சனிக்கிழ மையன்று துவக்கி வைத்தனர்.  இக் கண்காட்சியில் 70-க்கும் அதிகமான நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவு, மருத்துவம், ஆடை, வீட்டு உப யோக மற்றும் சிறு நிறுவன உற் பத்தி பொருட்களை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைத்துள் ளார்கள். நிகழ்ச்சிக்கு ஏ. கே. அஹமத் உரிமையாளர்  ஏ. கே. அஹமத் பாபு தலைமை வகித் தார். ஜாமிஆ இஸ்லாமியா  அறி வியல் & ஆய்வு அரபிக்கல்லூரி நிறுவனர், மௌலானா டாக்டர். கலீல் அஹமது முனீரி வாழ்த்திப் பேசினார், மதுரை ஐக்கிய ஜமாஅத் தலைவர் லியா கத் அலி, மதுரை அரசு டவுன் காஜி மெளலவி செய்யது காஜா மொயினுத்தீன், மதுரை ஜமா அத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி ஷாகுல் ஹமீது மன்பஈ ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்இசி நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.