districts

மதுரை விரைவு செய்திகள்

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணியில் குடிநீர் குழாய் உடைப்பு :

தூத்துக்குடி,அக். 12 தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டும்போது உடைந்த குடிநீர் பைப் லைனை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாநகராட்சி ராஜீவ் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சனிக்கிழமை மழைநீர் வடிகால் தோன்டும் போது குடிநீர் பைப் லைன் உடைந்தது. திங்களன்று அந்த பைப் லைன் சரி செய்யப்பட்டது. ஆனால் இதனை சீராக செய்யாததால் கழிவு நீர்புகும் அவலநிலை ஏற்பட்டது. இதனை சரிசெய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர்  முத்து தலைமையில் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த செல்வி, தமிழ், வீரம்மாள், கண்ணண், பிரேமா உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடைக் கப்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொது மக்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

கத்திமுனையில் வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு!

தூத்துக்குடி,அக். 12 தூத்துக்குடி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வாலிபரிடம், செல்போன், பணத்தை பறித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: கன்னியாகுமரி மாவட்டம் தலையான் கோணம் பகுதியை சேர்ந்தவர் நிக்கோலஸ் மகன் சுரேஷ் (38). இவர் தூத்துக்குடி வாகைகுளம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே தனது நண்பருக்காக காத்து  கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம  நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரி டம் இருந்த பணம் ரூ.24 ஆயிரம் மற்றும் ரூ.11ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுவிட்டனர். இது குறித்து சுரேஷ் புதுக்கோட்டை காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்

விஷப் பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு

தூத்துக்குடி,அக். 12 சங்கரலிங்கபுரம் அருகே விஷப் பாம்பு கடித்து 11வயது பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். தூத்துக்குடி மாவட்டம், சங்கர லிங்கபுரம் அருகே உள்ள கோடாங்கி பட்டி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த வர் பாண்டியன். இவரது மகன் மாரிச்செல்வம் (11). சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். திங்களன்று மாணவன் கடைக்கு செல்வதற்காக அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு காலில்  விஷப் பாம்பு கடித்துள்ளது. இதனால் வாயில்நுரை தள்ளி மயங்கிக் கிடந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மருத்து வமனை கொண்டு செல்லும் வழியில் பரி தாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து சங்கரலிங்கபுரம் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி,அக். 12 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 27ஆம் தேதி  எரிவாயு நகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட் டத்தில் எரிவாயு நகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 27.10.2021 அன்று பிற்பகல் 4.00 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சங்கு கூடத்தில்  நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிக ளும, கலந்துக் கொள்ள உள்ளார்கள். எரி வாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கப் படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர், தங்க ளது குறைகளை மனுவாக தட்டச்சு செய் தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரில் அளித்திடலா
 

;