districts

மதுரை விரைவு செய்திகள்

பெண்ணிடம்  நகை பறிப்பு

திருநெல்வேலி, அக்.02-  பாளை ரகுமத் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி மாரியம் மாள் (55). இவர் காலையில் வீட்டுமுன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று மாரியம்மாள் கழுத்தில் இருந்த 4 புவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார்.  அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மர்மநபரை பிடிக்க முயன்றனர். எனினும் அவர் நகை யுடன் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு  செய்த காவல்துறையினர் கொள்ளை யனை தேடி வருகின்றனர்.

நெல்லை ரயில் நிலையத்தில் தென்னக  ரயில்வே தலைமை அதிகாரி ஆய்வு

திருநெல்வேலி, அக்.2- நெல்லை சந்திப்பு ரயில் நிலை யத்தில் தென்னக ரயில்வே போக்கவரத்து தலைமை அதிகாரி ஆய்வு செய்தார். தென்னக ரயில்வே போக்குவரத்து தலைமை செயல் மேலாளர் நீனு இட்டேரா சென்னையில் இருந்து நெல்லை க்கு ரயிலில் வந்தார். பின்னர் நெல்லை  சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை நடை மேடை, ரயில் நிலையத்தில் நடைபெறும் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் தண்டவாளங்களை ஆய்வு செய்தார். மேலும் சென்னையில் இருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை முடிவ டைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. அதேநேரத்தில் மதுரையில் இருந்து நெல்லைக்கு இரட்டை ரயில் பாதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த இரட்டை ரயில் பாதைபணியை விரைந்து முடித்து ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  நெல்லையில் இருந்து இயக்கக் கூடிய பயணிகள் ரயில்களான திருச்செந்தூர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை, நாகர்கோவில் ஆகிய பயணிகள் ரயில்களை விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது, நெல்லை ரயில்வே மேலாளர் முருகே சன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

திருநெல்வேலி, அக்.2- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை (35). இவர் சிறுமிக்கு பாலி யல் தொல்லை கொடுத்ததாக நெல்லை அனைத்து மகளிர் காவல்துறையினர் இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இவர் மீது நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொ டர்ந்தனர். வழக்கை நீதிபதி அன்பு செல்வி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத் துரைக்கு 7 வருடம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளியன்று தீர்ப்பு கூறினார்.

;