districts

img

12 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய பெரிய அருவி நீர்த்தேக்க அணைக்கட்டு

மதுரை, அக்.14- மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில், அழகர்மலை பின்புறப் பகுதியில் உள்ள கடுமிட்டான்பட்டியில் 27 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு கட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 26 கண்மாய்கள் நிரம்பி, 700 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அருவி நீர்த்தேக்க அணைக்கட்டு அதன் முழு கொள்ளளவான 27 அடியை அடைந்தது. மேலும் மறுகால் வழியாக நீர் பாய்ந்தோடுகின்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியுள்ளதால், மேலூர் மற்றும் நத்தம் பகுதி மக்கள் நிரம்பிய அணைக்கட்டை பார்க்க ஆர்வமுடன் வந்தனர்.

;