districts

மதுரை முக்கிய செய்திகள்

என்சிபிஎச்-இல் சுதந்திர தின சிறப்பு புத்தகக் கண்காட்சி துவங்கியது 

மதுரை, ஆக.11-  மதுரையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்சிபிஎச்) நிறு வனத்தில் சுதந்திர தின சிறப்பு புத்தகக் கண்காட்சி மற்றும்  விற்பனை துவங்கியது. தமிழகத்தில் வாசிப்புப் பழக்கத்தைப் பரவலாக்கும் நோக்கில் தமிழகமெங்கும் பள்ளி. கல்லூரி மற்றும் பல்  வேறு மையப் பகுதிகளிலும் என்சிபிஎச் தொடர்ந்து ஏரா ளமான புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அவ்  வகையில் 75ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு  மதுரை மேல கோபுரத் தெருவில் உள்ள  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில்  சிறப்பு புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இக்கண்  காட்சியில் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை சிறப்புத்  தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள் ளன. கலை இலக்கியம், பண்பாடு, வரலாறு, திறனாய்வு,  அரசியல், அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்து வம், கல்வியியல், மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய நூல்கள், பொதுஅறிவு, பாரதி, பாரதிதாசன், திருக்குறள், சிறார் நூல்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆசிரி யர்களான ரொமிலா தாப்பரின் முற்கால இந்தியா, ரஜனி  பாமிதத்தின் இன்றைய இந்தியா, டி.டி.கோசாம்பி எழுதிய பண்டைய இந்தியா, பிபின் சந்திரா  எழுதிய நவீன இந்தியா வில் வகுப்புவாதம் மற்றும்  போட்டித்தேர்வுக்கு பயன்படக்  கூடிய வகையில் புத்தகங்களை என்சிபிஎச் வெளியிட்டு வருகிறது.  இந்த புத்தகக் கண்காட்சியில் ரூ.5 ஆயிரத்திற்கு மேல்  புத்தகம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்கலைக் கழக மானியக்குழு அங்கீகாரம் பெற்ற (UGC) ‘உங்கள்  நூலகம்’ மாத இதழுக்கான ஒரு ஆண்டு சந்தா இலவசமாக வழங்கப்படும் என்று  என்சிபிஎச் நிறுவனத்தின் மண்டல  மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ 4 லட்சம் மோசடி 

அருப்புக்கோட்டை, ஆக.11- அருப்புக்கோட்டை வடுகர் கோட்டைப் பகுதியில் வசிப்பவர்  சீனவாசகம் என்பவரது மனைவி லீலாவதி  (59).   இவரிடம் ஆத்திப்பட்டியைச் சேர்ந்த பூமிராஜ்-ஆதி லட்சுமி தம்பதியர்,  பி.காம் படித்துள்ள லீலாவதியின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும், அதற்கு  ரூ.4 லட்சம் செலவாகும் என தெரி வித்துள்ளனர். எனவே, லீலாவதி அப்பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக தம்பதியரிடம் வழங்கியுள்ளார்.   ஆனால் சொன்னபடி அரசு வேலை வாங்கித்தர வில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு பூமிராஜ் மற்றும் ஆதிலட்சுமி தம்பதியர், லீலாவதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. எனவே லீலாவதி  அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார்  செய்தார். அதன்பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்ட நீதிமன்றங்களில்  நாளை லோக் அதாலத்

தேனி, ஆக.11- தேனி மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணைக்  குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதி பதி சஞ்சய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்  நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்த லின்படி தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்தம பாளையம், ஆண்டிபட்டி, போடி வட்ட சட்டப்பணிகள் குழுவில் வருகிற 13ந் தேதி  தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்கு கள் நடைபெற உள்ளது.  இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட வழக்கு, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்வி  கடன், வங்கி கடன், குடும்ப வன்முறை வழக்கு, காசோலை, நுகர்வோர் வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்கு பிரச்சனைகள்  சமாதானமாகவும், நிறைவாகவும் சுமூக மாகவும் தீர்வு காணலாம்.

பொதுத்தொழிலாளர் சங்க ஆண்டுப்பேரவை 

மதுரை, ஆக.11- சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மதுரை  தெற்குத் தாலுகா 12 ஆம் ஆண்டு பேரவை திருப்ப ரங்குன்றம் கே.பி.ஜானகியம்மாள் அரங்கில் சி.பாண்டி யன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட  துணைச் செயலாளர் சி.மணிகிருஷ்ணன் துவக்கவுரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் ஜி.கௌரி வாழ்த்துரை வழங்கி னார். தாலுகாச் செயலாளர் எஸ்.எம்.பாண்டி வேலை யறிக்கை சமர்ப்பித்தார். பி.எஸ்.ஜெயப்பிரகாஷ் வரவு-  செலவு அறிக்கை சமர்பித்தார். சிஐடியு மதுரை புறநகர்  மாவட்ட செயலாளர்  கே.அரவிந்தன் நிறைவுரையாற்றி னார். தலைவராக பொன்.கிருஷ்ணன், பொதுச்செயலா ளராக எஸ்.எம்.பாண்டி.பொருளாளராக பி.எஸ்.ஜெயப் பிரகாஷ் உள்பட 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

சமயநல்லூர் அருகே தொடர் விபத்து ஒருவர் பலி- வேன் தீப்பிடித்தது

மதுரை, ஆக.11- மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அடுத்த டுத்து நிகழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார் வேன் தீப்பிடித்து எரிந்தது.  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடை யாள்புரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி .இவரது மகன் சிபி ராஜ் (19) இவர் மோட்டார் சைக்கிளில் அதிகாலை 5.45 மணிக்கு மதுரையை நோக்கி சென்று கொண்டி ருந்தார். அப்போது சமயநல்லூர் அருகே டபேதார் சந்தை  முன்பாக சாலையை கடக்க முயன்ற போது சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (59) என்பவர் மீது  எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுந்தரராஜன் சம்பவ இடத்தில் பலியானார். சிபி ராஜ் படுகாயமடைந்தார்.  அதே நேரத்தில் கோயம்புத்தூரில் இருந்து மதுரை  நோக்கி  வேன் வந்தது. அந்த வேனை உசிலம்பட்டி யைச் சேர்ந்த பாண்டி (40) என்பவர் ஓட்டி வந்தார். அந்த  வேன் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதி யவுடன் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென்று பரவிய தால்  மோட்டார் சைக்கிள் வேன் முழுவதும் எரிந்தது.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்  தீயை அணைத்தனர். அடுத்தடுத்து நடந்த விபத்து சம்பந்த மாக சமயநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் மூழ்கிய ராணுவ வீரர் சடலம் மீட்பு 

மதுரை, ஆக.11- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே  மேலக்கால்  வைகை ஆற்றில் குளித்த இருவர் செவ்வாயன்று மாயமா கினர். இதில் சோழவந்தான் தீயணைப்பு துறையினர் ஒரு வரின் உடலை  கைப்பற்றினர்.  ராணுவ வீரரின்  உடலை தேடும் பணி நடைபெற்று வந்தது.  மதுரை மாவட்ட தீயணைப்புத்துறை  தலைவர் வினோத் தலைமையில்  40-க்கும் மேற்பட்ட தீய ணைப்பு வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வியா ழனன்று அதிகாலை 6 மணி அளவில் மேலக்கால் வைகை ஆற்று பாலம் அருகில் அழுகிய நிலையில் வினோத்குமா ரின் உடல் கண்டெடுக்கப்பட்டது அவரது உடல் மதுரை  ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது.   உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

மரத்தில் பைக் மோதி  விவசாயி பலி

கடமலைக்குண்டு, ஆக.11- தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டி யை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). விவசாயி. இவர் புதன்கிழமை தேனியில் இருந்து ஜி.உசிலம்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஜி.உசிலம்பட்டி அருகே சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பைக்  மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலை யில் பலத்த காயமடைந்த லட்சுமணன் தேனி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சு மணன் வியாழக்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு 10 ஆண்டு சிறை 

திருவில்லிபுத்தூர், ஆக.11-  அருப்புக்கோட்டை அருகே  காரியாபட்டி தோப்பூ ரில் வசிப்பவர்  வேல்முருகன் (வயது 48) கூலித் தொழி லாளி. இவரது மனைவி சந்திரா (வயது 47) இவர் களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு  இருந்து வந்துள்ளது இந்த நிலையில் கடந்த 28. 11. 2016 அன்று வேல்முருகன் தனது மனைவி சந்திரா விடம் வெளிநாட்டில் உள்ள தன் மகன் அனுப்பிய பணத்தைக் கேட்டு தகராறு செய்து, அரிவாளால் வெட்டி னார். இதில் படுகாயம் அடைந்த சந்திரா அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அவர் தந்த புகாரின் பேரில் காரியா பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி பி பகவதி அம்மாள், குற்றம் சாட்டப்பட்ட வேல்முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

மதுரை - மானாமதுரை வழியாக  வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

மதுரை, ஆக.11-  வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மதுரை - மானாமதுரை வழியாக திருவனந்தபுரம், எர்ணாகுளம் ரயில் நிலையங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு  ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06012) ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர்  7 ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து புதன்கிழமைகளில் மாலை 03.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (06011) ஆகஸ்ட்  18 முதல் செப்டம்பர்  8 ஆம் தேதி வரை வேளாங்கண்ணியில் இருந்து வியாழக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேரும். இந்த ரயில்கள் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06039) ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை எர்ணாகுளத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06040) ஆகஸ்ட்  16 முதல் செப்டம்பர்  6 ஆம் தேதி  வரை வேளாங்கண்ணியில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.  இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இராணுவ முகாமில் தற்கொலைப்படைத் தாக்குதல்  3 வீரர்கள் பலி; ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர்

ஜம்மு - காஷ்மீர், ஆக.11- ஜம்மு - காஷ்மீர் அருகே ராணுவ முகாமில்  நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் மூன்று  ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தும்மக்குண்டு கிராமத்தை அடுத்துள்ள தி.புதுப்பட்டி யைச் சேர்ந்தவர். பிர் பஞ்சால் பள்ளத்தாக்கில் அடர்ந்த காடு களின் தாயகம் என்றழைக்கப்படும் ரஜௌரி,  மாவட்ட  கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஓசி) அருகில் உள்ளது. தர்ஹால் தெஹ்சில் மாவட்டத் தலைமை யகத்திலிருந்து 26 கிமீ தொலைவில் உள்ள பர்கல்  இராணுவ முகாமில் வியாழன் அதிகாலை  பயங்கர வாதிகள்  இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில், மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப் பட்டனர்.

அப்பகுதியில், தொடர்ந்து இராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக ,ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா  இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் டி.லட்சுமணன்  ஆகியோர் பலி யாகினர்   என ஜே.கே.போஸ்ட் இணையதளம் தெரி வித்துள்ளது.  இந்தத்  தகவலை இராணுவ வட்டா ரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.  மதுரையைச் சேர்ந்தவர் பலி தாக்குதலில் பலியானவர்களில் ஒருவரான டி.லட்சுமணனின் சொந்த ஊர்  மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தும்மக்குண்டை அடுத்துள்ள தி.புதுப்பட்டி கிராமம். இவருக்கு இன்னும் திருமணம்  ஆகவில்லை. 2019-ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவரது தந்தை தர்மராஜ் தற்போது கேரளாவில் கூலி வேலை செய்துள்ளார். தாயார் ஆண்டாள்  தி.புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வரு கிறார். சு.வெங்கடேசன் எம்.பி.இரங்கல் உயிரிழந்த டி.லட்சுமணன் குடும்பத்திற்கு மதுரை  மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

வாரிசு வேலைக்கு லஞ்சம் கேட்டு பேரம் பேசிய விருதுநகர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 

ஆடியோ வைரல்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

விருதுநகர், ஆக.11- விருதுநகரில் கருணை அடிப்படை யில் வழங்கப்படும் வாரிசு வேலைக்காக பேரம் பேசி ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்கும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாள ரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்திற்கு உட்பட்டது நரிக்குடி. இப்பகு தியைச் சேர்ந்தவர் வேலம்மாள். இவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார். திடீரென அவர் இறந்து  விட்டார். எனவே  வேலம்மாளின் மகள் சீனி யம்மாள் கருணை அடிப்படையில் வாரிசு  வேலை வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்  துணவு) பணிபுரிந்து வருபவர் செல்வ ராஜ். இவர், சீனியம்மாளின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, வாரிசுப் பணி  வழங்க வேண்டுமெனில் ரூ.20 ஆயிரம்  லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, சீனியம்மாவிள் தம்பி பாம்  பலு நேர்முக உதவியாளர் செல்வராஜிடம் தொடர்ந்து செல்போனில் பேசுகிறார். பணம் தர வேண்டுமெனில் வேலை வேண்  டாம் எனக் கூறுகிறார். அப்போது, செல்வராஜோ, இது அரசுப் பணி தம்பி, நிரந்தரப் பணி. இப்பணி ரூ.5  லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது. எனவே, நாளை, காலை யாருக்கும் தெரியாமல் காலை 9 மணிக்குள் ரூ.15 ஆயிரம் கொண்டு வந்து தந்து விடுங்கள். ரகசி யம் காக்கப்பட வேண்டும். யாரிடமும் சொல்லிவிடக் கூடாது எனவும் தெரிவிக்கி றார். இதையடுத்து, ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் செல்வராஜ், அருப்புக் கோட்டைக்கு நேரில் சென்று ரூ.15 ஆயி ரத்தை கையூட்டாக பெற்றுள்ளார். தற்போது, அரசு அதிகாரி செல்வராஜ்,  லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் பணம் பெறும் வீடியோவும் உள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கருணை அடிப்படையில் வழங்கப்  படும் வாரிசு வேலைக்குக் கூட பகிரங்க மாக லஞ்சம் கேட்கும் இதுபோன்ற அரசு  உயர் அதிகாரிகள் மீது  தமிழக அரசு கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு  வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு  

திண்டுக்கல், ஆக.11- பனிரெண்டாம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மற்றும்  பழங்குடியின மாணவ, மாணவியர்களுக் கான வேலைவாய்ப்புடன் கூடிய பட்ட படிப்பை எச்.சி.எல் நிறுவனமும், தாட்கோ  நிறுவனமும் ஏற்கின்றன.  இது தொடர்பாக தமிழ்நாடு ஆதி திரா விடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மற்  றும் எச்.சி.எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2020-21 மற்றும் 2021-22வது கல்வி யாண்டில் 12 ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்  பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதி திராவிட மற்றும் பழங்குடியினத்ததைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு இந்த பயிற்சி  அளிக்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு முதல் ஆண்  டில் 6 மாதங்களுக்கு இணைய வழி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு தேவையான மடிக்கணிணியை எச்.சி.எல்  நிறுவனமே வழங்கும். அடுத்த 6 மாதத்தில்  சென்னை, மதுரை, நொய்டா, விஜயவாடா,  லக்னோ, நாக்பூர் ஆகிய நகரங்களில் இருந்து  நேரடி பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்  டில்  6  மாதம் முதல் ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இரண்  டாம் வருடத்தில் 3 விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழி வகை செய்யப்படும்.

அதன்  அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய  நிறுவனமான பிட்ஸ் பிலானி பல்கலைக்கழ கத்தில் பி.எஸ்.சி. டிசைன் மற்றும் கம்யூட்  டிங் பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இப்படிப்பானது பி.டெக் படிப்புக்கு சமமா னது. இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப் பினை எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கல்லூரியில் சேர்வதற்கு இயற்பியல் பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்  டும்.  இதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தகுதிகேற்ப  எச்.சி.எல். நிறுவனத்தில் வேலை வாய்ப்பு டன் கூடிய பி.சி.ஏ. 3 ஆண்டு பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். உத்தரப்பிரதேசத்தில் அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ, பி.சி.ஏ. மற்றும் பி.காம். பட்டப்படிப்பு படிப்பதற் கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட உள்  ளது. இதற்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி  பெற்ற மாணாக்கர்களுக்கு எச்.சி.எல். நிறு வனத்தில்  6 மாத பயிற்சிக்கான செலுத்த வேண்டிய கட்டணத்தொகையாக ரூ.1.18 லட்சத்தை எச்.சி.எல் நிறுவனத்திற்கு தாட்கோ  கல்விக் கடனாக தருகிறது. மேற்கண்ட 3 பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பட்டப்  படிப்பிற்கான ஊதிய உயர்வுடன் ஆண்டு  வருமானம் ரூ.1.17 லட்சம் முதல் 2 லட்சம் வரை எல்.சி.எல் நிறுவனத்தில் வழங்கப்படு கிறது. மேலும் விபரங்களுக்கு தாட்கோ இணையத்தளத்தில் தகவல்களை பெற லாம். இவ்வறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.                        (ந.நி.)

 

 

 

;