districts

img

சாத்தூரில் ரூ.6.16 கோடி மதிப்பில் கட்டிடப் பணிகள்

சாத்தூர், ஆக.19- விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப் பீட்டில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலைய  பணிமனை கட்டிடப்  பணிகள் மற்றும் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.2.43 கோடி மதிப் பீட்டில் சுற்றுலா மாளிகை கட்டும் பணி என மொத்தம் ரூ.6.16 கோடி மதிப்பிலான கட்டிடப் பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்  ஜெ.மேகநாத ரெட்டி தலைமை தாங்கி னார். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்   ரகுராமன் முன் னிலை வகித்தார். மேலும் இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர்  அனிதா, திரு நெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர்  செல்வ குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்  செல்வ ராஜ்,  ஒன்றியக்குழுத் தலை வர்  நிர்மலா கடற்கரை ராஜ், நகர்மன்ற தலைவர் குருசாமி, உதவி செயற்பொ றியாளர்  செந்தூர், வட்டாட் சியர்  வெங்கடேஷ் உட்பட   பலர் கலந்து கொண்டனர்.

;