districts

img

மணல் அகழ்வுப்பணிக்கு ராட்சத இயந்திரம் பொதுமக்கள் கோரிக்கை: ஆட்சியர் தகவல்

நாகர்கோவில், ஆக.18- தற்போது மணல் அகழ்வு பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள மணல் அகழ்வு இயந்திரத்தினை மாற்றி உடனடியாக ராட்சத மணல் அகழ்வு இயந்திரத்தினை வைத்து மணல் அகழ்வு பணி மேற் கொண்டிட மீனவ பிரதிநிதிகள் தன்னிடம் கோரிக்கை வைத்துள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த தெரிவித்துள்ளார். இதுகுறித்து மவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது: தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம்  இரையுமன்துறை பகுதியில் மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் புதனன்று (ஆக.17) நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு  செய்தார். அப்போது கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். தேங்காய் பட்டணம் மீன்பிடித் து றைமுகத்திற்குட்பட்ட இரையுமன்துறை பகுதியில் புதிதாக சீரமைக்கப்படவுள்ள 630 மீட்டர் நீளமுள்ள மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவரின் துவக்கப் பணிகளை வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள் ளப்பட்டதோடு, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள மணல் அகழ்வு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. ஆய்வின்போது தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பயனீட்டாளர்களால் உடனடியாக தங்குதடையின்றி தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுக மேற்கு பக்க  அலைத்தடுப்பு சுவர் பணியினை மேற்கொண் டிடவும், தற்போது மணல் அகழ்வு பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள மணல் அகழ்வு இயந்திரத்தினை மாற்றி உடனடியாக ராட்சத மணல் அகழ்வு இயந்திரத்தினை வைத்து மணல் அகழ்வு பணி மேற்கொண்டிட மீனவ பிரதிநிதிகள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் மேற்படி பணிகளை விரைந்து முடித்திட செயற்பொறியாளர், மீன்பிடி துறைமுக திட்டக்கோட்டம், நாகர்கோவில் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும்  அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது பத்மநாபபுரம் சார் ஆட்சியர் பு.அலர்மேல்மங்கை, துணை இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காசிநாதபாண்டியன், செயற் பொறியாளர் மீன்பிடி துறைமுக திட்டக் கோட்டம், நாகர்கோவில், உதவி இயக்கு நர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை குளச்சல், உதவி செயற்பொறியாளர், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம், தாசில்தார், கிள்ளியூர், தூத்தூர் மண்டல பங்குத்தந்தையர்கள், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்க உறுப்பினர்கள், மீனவ பிரதிநிதிகள், பயனீட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

;