districts

img

காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிடுக!

திண்டுக்கல், ஆக.8- கேரள மாநிலத்தை போல தமிழ் நாட்டில் உள்ள காய்கறி உற்பத்தி  செய்யும் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய  வேண்டும். நுகர்வோருக்கு விலை  குறைந்த காய்கறிகள் கனிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க திண்டுக்கல் மாவட்ட  மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க திண்டுக்கல் மாவட்ட 12வது மாநாடு ஞாயிறன்று ரெண்டலப்பாறையில் பேரணியுடன் துவங்கியது. ரெட்டிய பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற் றது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத்  தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு செயலா ளர் தா.அஜாய் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைத்தலைவர் கே.முக மது அலி, மத்தியக்குழு உறுப்பினர்  ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.செல்வ ராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டச்செயலாளர் கே.அருள் செல்வன், மாவட்டத்தலைவர் பி. வசந்தாமணி, விவசாயிகள் சங்க  மாவட்டச்செயலாளர் என்.பெரு மாள், அடியனூத்து ஊராட்சித்தலை வர் அ.ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றி யக்கவுன்சிலர் ஜே.ஜீவாநந்தினி, வர வேற்புக்குழு செயலாளர் பி.செல்வ நாயகம், போக்குவரத்து ஓய்வூதி யர் சங்க பொதுச்செயலாளர் கஸ்பர் ராஜ், சிபிஎம் ஒன்றியச்செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் ஐக்கிய முன்னணி தலைவர்கள் நிக்  கோலஸ் உள்ளிட்டவரக்ள் பாராட் டப்பட்டனர். 

திங்களன்று திண்டுக்கல்லில்  மகாலிங்க நாடார் திருமண மண்ட பத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடை பெற்றது. சங்க கொடியை மூத்த  தலைவர் ஆர்.மணி ஏற்றி வைத்  தார். மாநில துணைத்தலைவர் முக மதுஅலி துவக்கவுரையாற்றினார். மாவட்டச்செயலாளர் என்.பெரு மாள் அறிக்கை சமர்ப்பித்து பேசி னார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மாவட்டத்தலைவ ராக என்.பெருமாள், மாவட்டச்செய லாளராக எம்.ராமசாமி, பொருளா ளராக ஆர்.தயாளன், துணைத்தலை வர்களாக பி.செல்வராஜ், எஸ். பாண்டியராஜன், ஆர்.ராஜேந்திரன், எம்.காசிமாயன், துணைச்செயலா ளர்களாக தா.அஜாய், எஸ். கிருஷ் ணன், எல்.தங்கவேல், பி. தேவி ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்ட்டனர். 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது.  தமிழ்நாட்டில் பல லட்சக்கணக் கான விவசாயிகளை பாதுகாக்கும் விதமாகவும், நுகர்வோர்களுக்கு நல்ல காய்கறிகள் குறைந்த விலை யில் கிடைக்க கேரளா அரசைப் போல காய்கறிகள், பழங்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்.   15 ஆண்டுகளாக வனஉரிமை சட்டம் உள்ளது.

இந்த 15 ஆண்டு களில் 34 ஆயிரம் மனுக்கள் தான்  வந்துள்ளன. இதில் பாதி மனுக்களை  வருவாய்த்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் தள்ளு படி செய்துள்ளனர். வனநிலங்களில் பயிரிடக்கூடிய விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். நிலத்தை  சொந்தமாக்க வேண்டும். வன சிறு மக சூல் எடுக்க உரிமை வழங்க  வேண்  டும். ஆதிவாசி மக்கள் தொகையில் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதால் ஆட்சியாளர்கள் இந்த  சட்டத்தை அமலாக்க கடுகளவும்  அக்கறை எடுத்துக்கொள்ள வில்லை. இதனால் வனத்துறைக்கும் வன மக்களுக்கும் தொடர்ந்து  மோதல் நடக்கிறது. மனுக்களை நிரா கரிக்கும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதி  வாசி மக்களை திரட்டி மனுக்களை பெறுவதற்காக சிறப்பு கிராம சபை  வன கூட்டங்களை நடத்த வேண்டும். அதன் மூலம் ஆதிவாசி மக்களுக்கு வன உரிமைச்சட்டப்படி நிலம் வழங்கியது. பட்டா வழங்கியது தமிழ்  நாடு அரசு தான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.   தும்பலப்பட்டி உபரி நில விவ சாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். நீர் நிலைகளில் நீண்ட காலமாக புறம்போக்குகளில் வசிப்ப வர்களை அப்புறப்படுத்தக் கூடாது வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.  கோவில் நிலம்,  பஞ்சமி  நிலங்களை வகை மாமற்றம் செய்யா மல் அதை பயன்படுத்தும் விவசாயி களுக்கு பட்டா வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.     (ந.நி.)

;