districts

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பின தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி, நவ. 30- நெல்லை, தென்காசி மாவட் டங்களில் தொடர்ந்து பருவமழை  அதிகளவில் பெய்து வருவ தால், பெரும்பாலான இடங்க ளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் நெல் பயிர் கள், வாழைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் திங்களன்று பிற்பகல் மழை பெய்ய தொடங்கி யது. இரவு முழுவதும் விட்டு விட்டு செவ்வாயன்று காலை வரை மழை பெய்தது.அதிக பட்சமாக பாபநாசம் அணைப் பகுதியில் 91 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 84 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நெல்லை, பாளை, சேரன்மகா தேவி, களக்காடு, அம்பை, நாங்கு நேரி, ராதாபுரம், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம் உள்பட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழையும், கனமழையும் மாறி மாறி பெய்தது.  செவ்வாய்க்கிழமை பகலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.பலத்த மழை காரணமாக, இதுவரை நிரம்பாத மணிமுத்தாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. விநாடிக்கு 3,683 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கி றது.அணையில் இருந்து தண்ணீர் எதுவும் திறக்கப்பட வில்லை.  

காட்டாற்று வெள்ளம் மட்டுமே மணிமுத்தாறு ஆற்றில் செல்கிறது. இதனால் 107.55 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து செவ் வாய்க்கிழமை நிலவரப்படி 110.90 அடியானது.மணி முத்தாறு அணையின் மொத்த  நீர்மட்ட உயரம் 118 அடியாகும். தற்போது அணை திறக்கப்படாத தால் இன்று மாலையே அது 112 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. எனவே விரைவில் மணி முத்தாறு அணையும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பும் நிலையை அடைந்ததால், அணை பாது காப்பு கருதி கூடுதல் தண்ணீர்  திறக்கப்படுகிறது. செவ்வா யன்று காலை பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை பாதுகாப்பு கருதி ஆற்றில் 8,449 கனஅடி தண்ணீரும், அனைத்து கால்வாயில் முழுஅளவிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம்  சற்று குறைந்து  பாபநாசம் அணை நீர்மட்டம் 138 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.87 அடியாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ள மும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் நெல்லை பகுதி யில் தாமிரபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. மேலும் தாமிரபரணியின் கிளை நதி களான கடனாநதி, சிற்றாறு ஆகியவற்றின் வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.

;