districts

img

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் மரவள்ளி கிழங்கு அழுகும் நிலை

 சிதம்பரம், ஆக.7- சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2  லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ள நீர் செல்வதால் கொள்ளிடம் ஆறு  மற்றும் பழைய கொள்ளிடம் ஆறு  நடுவே உள்ள தீட்டுக் காட்டூர், ஜெயங் கொண்ட பட்டினம், அக்கர ஜெயங்கொண்டபட்டினம், கீழ குண்டலபாடி, எருக்கன் காட்டு படுகை  உள்ளிட்ட கிராம குடியிருப்பு மற்றும் வயல்வெளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  தொடர்ந்து 3 நாட்க ளாக வெள்ளநீர் சூழ்ந்துள்ள தால் மலர் சாகுபடியும், மர வள்ளி, முருங்கை, பருத்தி உள்ளிட்டவையும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது.   எனவே  விரைவில் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி யில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தண்ணீர் வடிந்தாலும் மரவள்ளி கிழங்கு, மலர்கள் அழுகிவிடும் எனவே இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்,  அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழையே இல்லாத நேரத்தில் இதுபோன்ற வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண கொள்ளிடக்கரையில் தடுப்புச் சுவர் மற்றும் தடுப்பணை கட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   வெள்ளம் சூழ்ந்த பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;