districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க இராமநாதபுரம் மாவட்ட மாநாடு

இராமநாதபுரம்,ஆக.19- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மாநாடு இராமநாதபுரத்தில் தோழர்.வி.சண்முகவேல் நினைவரங்கில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம்,  ஐஸ்வர்யா ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கக் கொடியினை மாவட்ட துணைத்தலைவர் முத்து ராமலிங்கம் ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தி னை மாவட்ட துணைச்செய லாளர் முனியசாமி வாசித் தார். மாவட்ட துணைத் தலை வர்  நிலர்வேணி வரவேற் ற்றார். மாநிலச் செயலாளர் முத்துக்காந்தாரி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசி னார். மாவட்டச் செயலாளர் இராஜ்குமார் வேலைய றிக்கையும் மாவட்ட பொரு ளாளர் அரிகர சுதன் வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் முத்துராமு, சிஐடியு மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தெட்சி ணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநி லச்செயலாளர் ஜீவா நிறைவு ரையாற்றினார். நாகேந்தி ரன் நன்றி கூறினார். மாநாட்டில் புதிய  நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவ ராக ராஜேஷ், மாவட்டச் செயலாளராக இராஜ்குமார், பொருளாளராக அரிகரசு தன், துணைத்தலைவர்க ளாக நிலர் வேணி, முத்து ராமலிங்கம், காமேஷ், துணைச்செயலாளர்களாக முனியசாமி, சீனிவாசன், நூர்முகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 23 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.  100 நாள் வேலை திட் டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு நான்கு மணி நேர வேலை மற்றும் அதற்கான சட்டக் கூலியை  வழங்க வேண்டும். மாற்றுத்திற னாளி களுக்கான குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சி யர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் கோட்டாட்சி யர் மாதம் ஒரு முறையும் கட்டாயமாக நடத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

;