districts

img

தில்லி விவசாயிகள் போராட்ட துவக்க நாள்! அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் நவ 26 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு  அனைத்து தொழிற்சங்கங்களின் விவசாயி கள் தில்லி போராட்டம் துவக்க நாளை நினைவுகூர்ந்து தொழிலா ளர் விவசாயிகள் கோரிக்கை களை வலியுறுத்தி பெரும் திரள் ஆர்ப்பாட்டம்  வெள்ளியன்று நடைபெற்றது. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்திட வேண்டும், அனை த்து பொருட்களின் விலையை கட்டுப்படுத்திட வேண்டும், தொழிலாளர்களின் நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், 3 வேளாண் சட்டங்க ளை  நாடாளுமன்றத்தின் மூல மாக திரும்பப் பெற வேண்டும், புதிய மின்சார சட்டத் திருத்த மசோதா 2021 ஜூ திரும்பப் பெற வேண்டும்,

100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் (வங்கி, பொது காப்பீடு, ரயில்வே, விமானம், பெல், இராணுவ தள வாட தொழிற்சாலைகள் அனைத் தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்  வலி யுறுத்தப்பட்டன. சிஐடியு மாவட்டச் செயலா ளர் தங்க மோகனன் தலைமை தாங்கினார். தொமுச மாநில துணை செயலாளர் இளங்கோ, எச்எம்எஸ் மாநில அமைப்பு செய லாளர் எஸ்.முத்து கருப்பன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் எஸ்.ராஜு, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் சி.ஜெரால்டு, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் ஆல்பர்ட் உள்ளிட்டோர் பேசினர்.  சிஐடியு சார்பில் எஸ். அந்தோணி, ஜி சந்திர போஸ், எம். சித்ரா, மாணிக்கவாசகம், ஏஐடியுசி சார்பில் ஆர் மாரி தாஸ், எல்.பி.ஏப் சார்பில் ம.பெரு மாள், சிவன் பிள்ளை, ஏஐடியுசி மரியாதாஸ், ஐஎன்டியுசி சார்பில் ஆர்.எஸ்.ராஜன், ராதாகிருஷ் ணன், எச்.எம்.எஸ்.சார்பில் லக்ஷ்மணன், எம்எல்ஏப் சார்பில் சந்திரன் உள்ளிட்டோர் உள்பட  ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;