districts

img

ஷாஃபியா படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப்.17- தில்லியில் மிகக்கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட  ஷாஃபியா ஷஃபிக்கு நீதி  கேட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காதஒன்றிய அரசினை கண்டித்தும் வேப்பமூடு சந்திப்பில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு மாநில இணை அமைப்பாளர் எம்.ஐடா ஹெலன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. தங்க மோகனன், மாவட்ட நிர்வாகி கள் சந்திரபோஸ், காளிபிரசாத், சந்திரகலா, எம். வேலம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

தக்கலை

தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர்  ஆர். லீமாரோஸ்  தலைமையில் நூர் முகமது துவக்கி  வைத்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு செயலாளர் சுப்பிரமணியம் பொருளாளர் அகமது உசேன் , மாதர் சங்க மாவட்ட செயலாளர் எம் ரகுபதி, மாநில துணைச் செயலாளர் என் உஷா பாசி  ஆகியோர்  உரை ஆற்றினார்.

திருநெல்வேலி

தில்லியில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவல் அதி காரி சபியாவின் படுகொலைக்கு நீதி கேட்டு மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலகுழு மாவட்டத் தலைவர் வீ.பழனி தலைமை தாங்கினார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலா ளர் பி.கற்பகம், மாவட்ட தலை வர் வழக்கறிஞர் கு.பழனி , சிபிஎம் நாங்குநேரி தாலுகா செயலாள ரும் வழக்கறிஞருமான பி.எம். முருகன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட நிர்வாகி முத்துமுஹம்மது,சமூக  ஆர்வலர் பீட்டர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாளையங் கோட்டை தாலுகா செயலாளர் பா.வரகுணன், மாவட்டக்குழு உறுப்பினர் பேரின்பராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாரி யப்பன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி சுமா உட்பட பலர் பேசினர். நெல்லை வண்ணார்பேட்டை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க மாவட்ட செயலா ளர் பி.கற்பகம் தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தில் நாங்கு நேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா மொய்னுதீன் ஆகியோர் கருத்து ரையாற்றினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் கே.ஜி.பாஸ்கரன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் காசி விஸ்வநாதன், தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட தலைவர் வீ.பழனி, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் , மதிமுக மாவட்டச் செயலாளர் நிஜாம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலா ளர் மீரான் முகைதீன் ,விடுதலை  சிறுத்தை கட்சி மாவட்ட செயலா ளர்  கரிசல் சுரேஷ்,மனித நேய  மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர்  ஹயாத் முகம்மது ,வழக்கறிஞர் ரமேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

;