districts

img

விருதுநகர் மாவட்டம் முழுவதும் சிபிஎம் மனுக் கொடுக்கும் போராட்டம்

விருதுநகர், ஆக.11- தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண் டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. தமிழக அரசானது மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. அதில், 200 யூனிட்டுகளுக்கு மேல்   பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.27.50ம், 300 யூனிட் வரை பயன்படுத்தி னால் மாதம் ரூ.72.50ம் உயர்த்தப்படும் எனவும், ல2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர்  மாதம் ஒன்றுக்கு ரூ. 147.50 அதிகமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தி யாவசியப் பொருட்கள் விலை உயர்வு,  ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்  கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலை யில் மின் கட்டண உயர்வு மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்பப் பெற  வேண்டும், மாதந்தோறும் மின் கட்ட ணத்தை கணக்கெடுப்பு செய்தல் வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர்  மாவட்டம் முழுவதும் மனுக் கொடுக் கும் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மின்வாரிய அலுவலகம்  முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஜேசிடியு செயலாளர் தேனிவசந்தன் தலைமையேற்றார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி,  நகரச் செயலாளர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த தலை வர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன  உரையாற்றினார். மேலும் இதில், மாவட்  டக்குழு உறுப்பினர்கள் ஆர்.பாலசுப்பி ரமணியன், என்.உமாமகேஸ்வரி, எம்.ஜெயபாரத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

காரியாபட்டியில்  போராட்டத்திற்கு வட்ட செயலாளர் ஏ.அம்மாசி தலைமை யேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முத்துக்குமார் கண்டன உரை யாற்றினார். பி.மலைச்சாமி, எம்.பரம சிவம் உட்பட பலர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டையில் நகர் குழு  செயலாளர்  எஸ். காத்தமுத்து தலைமை  ஏற்றார். சிஐடியு  கன்வீனர்   எஸ்.தமிழ்ச்  செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர். பந்தல்குடியில் ஒன்றிய செயலா ளர் எம்.கணேசன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

திருவில்லிபுத்தூர் 

மனு கொடுக்கும் போராட்டம் ராஜ பாளையம் நகர், கிழக்கு. மேற்கு திரு வில்லிபுத்தூர் பகுதிகளில் நடை பெற்றது. ராஜபாளையம் பொன்ன கரத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு நகர் குழு உறுப்பினர் சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். தமி ழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திர ராஜா துவக்கி வைத்து பேசி னார். நகரச் செயலாளர் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் நிறைவு செய்து பேசினார்.
 


 

;