districts

img

சீகுபட்டி கிராமத்திற்கு பொதுமயானம், தண்ணீர் கேட்டு சிபிஎம் மனு அளிப்பு

மதுரை,ஆக.19- சீகுபட்டி கிராமத்திற்கு பொதுமயானம், விளையாட்டுத்திடல் மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தில் தண்ணீர் கேட்டும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மஞ்சம்பட்டி கிளைச் செயலாளர் சி.முருகன் மனு அளித்தார்.  கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்னன், ஒன்றியக்குழு உறுப் பினர் ஜெயநாகன், மற்றும் கண்ணன் ஆகி யோர் இந்த மனுவை அளித்தனர்.  அந்த மனுவில்,  மதுரை மேற்கு ஒன்றி யத்தில் உள்ள மஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சீகுபட்டி கிராமத்தில் 500 ஆதிதிரா விடர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடம் சர்வே எண்கள். 67/1-ல் விளை யாட்டுத் திடல், ச.எண். 73, 75-ல் பொது மயா னம் அமைக்க வேண்டி சீகுபட்டி கிராம மக்கள் சார்பாக பல ஆண்டு காலமாக தொடர்ச்சியாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை வடக்கு வட்டாட்சியர் , வரு வாய் கோட்டாட்சியர் ,

 மதுரை மேற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்  ஆகி யோருக்கு கடிதம் எழுதப்பட்டும் எந்தவித மான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஓடையின் கரையில் பிணத்தை எறித்தும், புதைத்தும் வருகிறோம். பொதுமக்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். சீகுபட்டியில் உள்ள சிறுவர்கள், மாண வர்கள் ரோட்டில் விளையாடுவதால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். கிராம மக்கள் சார்பாக  மாவட்ட ஆட்சித்தலைவர், வடக்கு வட்டாட்சியர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பிய போது, அவர்கள் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை  தொடர்பு கொள்ளச் சொல்லி எங்களுக்கு கடிதம் மூல மாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.  எனவே  தாங்கள்  கிராமத்திற்கு மயானம் மற்றும் விளையாட்டுத் திடல் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மற்றொரு மனுவில்,  மஞ்சம்பட்டி, சீகுபட்டி கிராமத்திற்கு ஒன்றிய  அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப் பட்டு வருகிறார்கள். ஆகவே உடனடியாக குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

;