தென்காசி, பிப்.17- திருவேங்கடம் பேரூராட்சி வார்டு எண் - 6ல் திமுக தலைமை யிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர் கல்பனா கோமதியை ஆதரித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் உ.முத்துபாண்டியன் வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் தாலுகா செய லாளர் எஸ்.கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.உச்சி மாகாளி, மாவட்டக்குழு உறுப்பி னர் கே.மாடசாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் ஜி.லட்சுமி நாரா யணன், ஏ.செந்தூர்பாண்டியன், எஸ்.வேணுகோபால், வார்டு செயலாளர் வேணுகோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.