districts

img

தாமரங்கோட்டை தோழர் ஏ.கோவிந்தசாமி படத்திறப்பு

பட்டுக்கோட்டை, அக்.20 - பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தோழர், சிபிஎம் பட்டுக்கோட்டை தாலுகா கமிட்டி முன்னாள் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சா வூர் மாவட்ட துணைத் தலைவர், தென்னை விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினராக பணியாற்றி மறைந்த, தாமரங்கோட்டை ஏ.ஜி என்ற  ஏ.கோவிந்தசாமி படத்திறப்பு புக ழஞ்சலி நிகழ்ச்சி பட்டுக்கோட்டை ஒன்றி யம், தாமரங்கோட்டையில் அவரது  இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏ.கோவிந்தசாமி உருவப் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். பட்டுக் கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பி னர் கா.அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை ஒன்றியப் பெருந்த லைவர் பழனிவேல், அதிமுக முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் பி.என்.ராமச்சந்தி ரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி, மெரினா ஆறுமுகம், குடும்பத்தி னர், உறவினர்கள் கலந்து கொண்டனர். 

;