districts

img

100 சதவீதம் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

தூத்துக்குடி, அக்.28- தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையில் வியாழ னன்று (28.10.2021) நடைபெற் றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் பல் வேறு கோரிக்கைகள், குறை களை கேட்டறிந்தார். மேலும் விவ சாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை உடனுக்கு டன் நிறைவேற்ற உரிய அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 மானிய திட்டங்களின் விவ ரத்தினை மாவட்ட ஆட்சியர் விவ சாயிகளிடம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் வருடாந்திர இயல்பான மழை யளவு 662.20 மி.மீ. அக்டோபர் 2021 மாதம் இயல்பான மழை யளவு 150.70 மி.மீ., அக்டோபர் 2021 (27.10.2021 வரை) மாதத்தில் மட்டும் இதுவரை 60.61 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரை 393.40 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும், 24.02.2021 அன்று வரை பாபநாசம் அணை கொள்ளளவு 143 அடி, இருப்பு  137.35 அடியாகவும், மணிமுத் தாறு அணை கொள்ளவு 118 அடி, இருப்பு 79.10 அடியாகவும், சேர்வ லாறு அணை கொள்ளவு 156 அடி, இருப்பு 136.97 அடியாக வும் உள்ளது. ஒவ்வொரு மாதமும் விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது துறை அலுவலர்கள் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப் படுகிறது. மேலும் பிற துறை களின் சார்ந்த மனுக்களின் மீதும் நடவடிக்கைகள் குறித்தும் தெரி விக்கப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் 100 சதவீதம் காப்பீடு செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டு சிறப்பு நடவ டிக்கைகளும் மேற்கொள்ளப்படு கிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளான அனைத்து உரங்களுக்கு அரசு நிர்ணயித்த விலை பட்டியலை தனியார் கடை களில் ஸ்டிக்கர் மூலம் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் அனை வரும் தெரிந்து கொள்ளும் வகை யில் ஒட்டுவதற்கு உரிய அலுவ லர்களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.

தனியார் உர நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 1810.432 மெ.டன்னும், டி.ஏ.பி. 216.833 மெ.டன்னும், பொட்டாஷ் 1059 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2122 மெ. டன்னும் இருப்பில் உள்ளன. இந்த வாரத்தில் இப்கோ நிறு வனத்தின் மூலம் 800 மெ.டன் யூரியா இம்மாவட்டத்திற்கு சப்ளை செய்யப்பட உள்ளது. 2020-21-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்ததில் காரீப் பருவ பயிர்களான நெல்-ஐ மற்றும் நிலக்கடலை-ஐ பயிர்களுக்கு 933 விவசாயிகளுக்கு ரூ.51.8 இலட்சம் இழப்பீட்டுத்தொகை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமி டெட் நிறுவனத்தால் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுள்ளது. மேலும், சிறப்பு பருவம் நெல்-ஐஐ பயிர்க்கு 662 விவசாயி களுக்கு 54.67 இலட்சம் இப்கோ - டோக்கியோ நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராபி பருவ பயிர்களுக்கு காப் பீடு இழப்பீட்டுத்தொகை இப்கோ - டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு விரைவில் விடுவிக்கப்பட உள் ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக காரிப் பரு வத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாக 8 இடங்களில் (குரும்பூர், தென் திருப்பேரை, அப்பன்கோவில், பன்னம்பாறை, திருவைகுண் டம், நத்தம், வல்லநாடு, மணக் கரை) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு முன் கார் மற்றும் கார் சாகுபடியின் கீழ் 26.10.2021 வரை 4894 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் கண்ணபிரான், இணை இயக்குநர் (வேளா ண்மைத்துறை) முகைதீன், மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) பழனிவேலாயுதம், கூட்டு றவு இணை பதிவாளர் பொறுப்பு சிவகாமி, வருவாய் கோட்டாட்சி யர்கள் சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), சங்கரநாரா யணன் (கோவில்பட்டி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.

;