districts

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு எடுத்த முயற்சிக்கு சிஐடியு வரவேற்பு

விருதுநகர், அக்.17- விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு எடுத்துள்ள முயற்சியை சிஐடியு-பட்டாசுத் தீப் பெட்டித் தொழிலாளர் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.மகாலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  தீபாவளிப் பண்டிகை என்றாலே பட்டாசுகளை குடும்பத்துடன் வெடித்துக் கொண்டாடுவது தான் மகிழ்ச்சியான தருணங்களாகும். ஆனால், அத்தகைய பட்டாசுகளை உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, வெடித்துக் கொண்டாட என பல்வேறு தடைகள் வந்து கொண்டே உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக பட்டாசுத் தொழில் உள்ளது. தீபாவளிப் பண்டிகை வர சில வாரங் களே உள்ள நிலையில், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பட்டாசுகளை விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்தது.  இந்நிலையில், தமிழக முதலமைச்சர் அம்மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர் களுக்கு பட்டாசு வெடிக்கத் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கடிதம் அனுப்பினார். இதையடுத்து ராஜஸ்தான் அரசு தடையை நீக்கியுள்ளது. தமிழக முதலமைச்சரின் முன் முயற்சியை சிஐடியு-பட்டா சுத் தீப்பெட்டித் தொழிலாளர் சங்கம் வர வேற்கிறது. மேலும், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக அரசு தரப்பில் இணைந்து பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட முன் வர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;